புருஷனை போட்டுத்தள்ளிவிட்டு! பக்கத்து ரூமில் மனைவி செய்த காரியம்! கோர்ட் பரபர தீர்ப்பு!

1 week ago 4
ARTICLE AD

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் அக்பர்பூர் சதாத் கிராமத்தைச் சேர்ந்தவர் அமித் காஷ்யப். இவரது மனைவி ரவிதா. இந்த தம்பதிக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அமித் காஷ்யப் நண்பர் அமர் தீப் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது  ரவிதாவுக்கும் அமர் தீப்  இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர்.

கள்ளக்காதல்

இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி அமர் தீப் பாம்பு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். அன்று இரவே கணவர் தூங்கியதும் கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.

நாடகமாடிய மனைவி

பின்னர் மனைவி ரவிதா தனது தாலி கட்டிய கணவர் என்று கூட பாராமல் வாயை பொத்தியதும் கள்ளக்காதலன் துடிதுடிக்க கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். ஏதுவும் தெரியாதது போல மனைவி தூங்க சென்றுவிட்டார். மறுநாள் காலையில் கணவர் பாம்பு கடித்து உயிரிழந்தது போல மனைவி கதறி அழுது குடும்பத்தாரை நம்ப வைத்துள்ளார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அமித் காஷ்யப்பின் மூக்கு மற்றும் கழுத்தில் காயங்களும், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையும் படிங்க: ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!

பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி

இதனையடுத்து போலீசார் கொலை வழக்கமாக மாற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு மனைவி ரவிதா மற்றும் அமர்தீப்பை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு மீரட் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதை அடுத்து இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர்களுக்கான தண்டனை விவரமும் வெளியாகியுள்ளது. அப்போது ரவிதா, அமர்தீப் ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது.

Read Entire Article