பும்ரா மட்டும் போதுமா? பந்துவீச்சில் பலம்பெறுமா இந்தியா?

1 month ago 7
ARTICLE AD

இந்திய கிரிக்கெட் அணிக்கு இது பொற்காலம் என்றே கூறலாம். அகமதாபாத்தில் நேற்று நடந்த டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 3வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது. டி20 உலகக்கோப்பையை 3 முறை வென்ற முதல் அணி, அடுத்தடுத்து 2 டி20 உலகக்கோப்பையை வென்ற முதல் அணி என்ற வரலாற்றை இந்தியா படைத்துள்ளது.

வாரி இறைக்கும் பந்துவீச்சு:

இந்திய அணி இந்த டி20 உலகக்கோப்பையை வெல்ல பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, திலக் வர்மா, அபிஷேக் சர்மா, அக்ஷர் படேல் என பேட்டிங்கில் பலரும் பக்கபலமாக இருந்தனர். ஆனால், வேகப்பந்துவீச்சில் மிகப்பெரிய பலமாக பும்ரா மட்டுமே இருந்தார் என்றே கூற வேண்டும்.

ராணாவிற்கு பதிலாக அணியில் இடம்பிடித்த முகமது சிராஜ் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக அணியில் இடம்பிடித்த அர்ஷ்தீப்சிங்கும் ரன்களை வாரி இறைத்தார். பாண்ட்யா ஓவரையும் சில போட்டிகளில் எதிரணியினர் துவம்சம் செய்தனர்.

பும்ராவின் கட்டுக்கோப்பு:

இந்திய அணி கோப்பையை வென்றுவிட்டதால் இந்திய பந்துவீச்சில் உள்ள ஓட்டை பெரியளவு கவனிக்கப்படாமல் உள்ளது. அடுத்து இந்திய அணி 50 ஓவர் உலகக்கோப்பையை எதிர்நோக்கி பயணிக்க உள்ளது. 50 ஓவர் உலகக்கோப்பையை கடந்த முறை இறுதிப்போட்டியில் இந்திய அணி இழந்தது. அடுத்த  உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி பந்துவீச்சை மேம்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

இந்திய அணியில் கட்டுக்கோப்பாகவும், எதிரணியை நிலைகுலைய வைக்கும் வகையிலும் இருக்கும் பந்துவீச்சாளராக பும்ரா உள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவருக்கு பக்கபலமாக முகமது சிராஜ் இடம்பிடிக்க உள்ளார். சிராஜ் நல்ல வேகம், விக்கெட்டுகளை எடுக்கும் திறன் கொண்டவராக இருந்தாலும் சில நேரங்களில் ரன்களை அதிகமாக கொடுத்துவிடும் சிக்கலும் உள்ளது.

பும்ரா மட்டும் போதுமா?

அர்ஷ்தீப்சிங், ஹர்ஷித் ராணா போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் தங்களை கட்டுக்கோப்பான பந்துவீச்சாளர்களாக வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். காயம் அல்லது வேறு காரணங்களால் இந்திய அணியில் பும்ரா இடம்பெறாவிட்டால் பும்ரா போல அணியை தனி ஆளாக தாங்கும் திறன் யாருக்கு இருக்கிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் முகமது சிராஜ் அதை சாதித்துக் காட்டியுள்ளார். இருப்பினும், பும்ரா போல அனைத்து பந்துவீச்சாளர்களும் செயல்பட்டால் மட்டுமே ஒருநாள் மட்டுமின்றி டெஸ்ட், டி20 போட்டிகளிலும் இந்திய அணி சிம்ம சொப்பனமாக எதிரணிக்கு திகழ முடியும்.

வளர்க்க வேண்டியது அவசியம்:

டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தமட்டில் இந்திய அணியின் செயல்பாடு கடந்த 2 ஆண்டுகளில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் இந்திய அணி வலுவாக வேண்டியது அவசியம் ஆகும். ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தமட்டில் களத்தில் முழுமையாக 10 ஓவர்கள் வீசும் ஆற்றல், விக்கெட் எடுக்கும் திறன், கட்டுக்கோப்பாக வீசும் வியூகம் ஆகியவற்றை இந்திய வீரர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஆகும்.

Read Entire Article