புனித நீராட முடியாமல் தவிக்கிறோம்... பக்தர்களின் குற்றச்சாட்டுக்கு அறநிலையத்துறை விளக்கம்

1 month ago 5
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மகாமக குளத்தை மதியத்திற்கு மேல் பூட்டி விடுகின்றனர். இதனால் வெளியூர் மற்றும் வெளி மாவட்டம், மாநிலத்தில் இருந்து வரும் பக்தர்களால் புனித நீராட முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவில் உள்ள புண்ணிய தீர்த்தங்களுள் ஒன்று கும்பகோணத்தில் உள்ள மகாமக குளம் ஆகும். கும்பகோணம் காசிவிஸ்வநாதர் கோயில் அருகே இந்த குளம் உள்ளது. ஆண்டு தோறும் நடக்கும் மாசிமக திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த குளத்தில் புனிதநீராடுவார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமக திருவிழாவில் லட்சக்கணக்கானோர் புனித நீராடுவார்கள். கும்பகோணம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த குளத்தை சுற்றிலும் 16 மண்டபங்களும், 21 தீர்த்த கிணறுகளும் உள்ளன.

காசிக்கு நிகரான புண்ணியம் கொடுக்கக்கூடிய தீர்த்தகுளமாக இந்த குளம் விளங்குகிறது. இந்த மகாமக குளத்தில் நீராடினால் தேவ தீர்த்தத்தில் நீராடிய பலன் கிடைக்கும். ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு இந்த குளத்தில் தர்பணம் கொடுத்து வழிபாடு செய்வது வழக்கம். இந்த குளத்தில் சில செயல்கள் செய்ய கூடாது என்ற விதிமுறைகள் உள்ளன. அதனால் குளத்தை சுற்றிலும் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மகாமக குளத்திற்கு உள்ளூர் மக்களை காட்டிலும் வெளியூர் மக்கள் மற்றும் பக்தர்கள்தான் அதிகளவில் வருகின்றனர். தினமும் அதிகாலை 4.30 மணி முதல் மதியம் 1 மணி வரை குளத்தில் புனித நீராட அனுமதி உள்ளது. இதற்காக வடக்கு பக்கம் கரையின் ஒரு பகுதி கதவை திறந்து அனுமதிப்பார்கள். அதன் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக காசிவிஸ்வநாதர் கோயில் பணியாளர்கள் குளத்தின் இரும்பு தடுப்பு வேலியை பூட்டி விடுவார்கள். இதனால் மதியத்திற்கு மேல் வரும் வெளியூர் பக்தர்கள் புனித நீராட முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், மகாமக குளத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. எப்போதும் திறந்து வைத்தால், சமூக விரோத செயல்களுக்கு காரணமாக ஆகிறது. அதிகாலை திறந்து மதியம் 1.30 மணிக்கு குளத்தை மூடுவது என்பது பல ஆண்டுகளாக பின்பற்றி வரும் வழிமுறை. புனிதத்தை காக்க பக்தர்கள் புனித நீராடவும் மகாமக குளம் திறந்து வைக்க பல விதிமுறைகள் உள்ளது.

வெளி மாவட்ட, வெளிமாநிலங்களில் கோயில் குடமுழுக்குவிற்கு புனித நீர் எடுத்து செல்ல வருவார்கள். 1.30 மணிக்கு மேல் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து புனித நீராட வருபவர்கள் கோயில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிப்பார்கள். அவர்கள் வந்தவுடன் கோயில் பணியாளர்கள் பக்தர்களை அழைத்து சென்று புனித நீராட வைத்துவிட்டு அனைவரும் வெளியேறிய பின்னர் குளத்தை மூடிவிடுவோம். பெரும்பாலும் அனைவரும் அதிகாலை முதல் மதிய நேரத்திற்கு முன்பே வந்து செல்வார்கள். இரவு 6 மணிக்கு மேல் எந்த காரணத்திற்காகவும் குளம் திறக்கப்படுவது இல்லை. குளத்தில் புனித நீராடவும், புனித நீர் எடுத்த செல்லவும் யாருக்கும் அனுமதி மறுப்பது இல்லை.

குறிப்பாக பக்தர்கள் மற்றும் குளத்தின் பாதுகாப்பிற்காக உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் படி இந்த வழிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.

Read Entire Article