புத்தாண்டு கொண்டாட்டத்தில் மழை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

3 months ago 8
ARTICLE AD

"சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது"

பிறந்தது புத்தாண்டு

கடந்த 2025ம் ஆண்டு கொடுத்த படிப்பினகளை கொண்டு வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்தும் விதமாக, புத்தாண்டான 2026ம் ஆண்டை பொதுமக்கள் நள்ளிரவில் உற்சாகமாக வரவேற்றனர். உள்ளூர் தொடங்கி உலக நாடுகள் வரையிலான மக்கள், தங்களுக்கு பிடித்தமான விதத்தில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுடன் சேர்ந்து அந்த தருணத்தை மகிழ்ச்சிகரமானதாக மாற்றினர். சென்னையில் புத்தாண்டின் போது பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மழையிலும் பொதுமக்கள் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடி வரவேற்றனர்.

வானிலை மையம் எச்சரிக்கை TN Weather Forecast

முன்னதாக நேற்று வானிலை மையம் வெளியிட்ட் அறிக்கையில், “இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அடுத்த 03 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை

இன்று காலை 7 மணியிலிருந்து காலை 10 மணி வரை 8 மாவட்டங்களுக்கு மழை முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கரூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிதமான மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தாண்டு மழையுடன் தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read Entire Article