புதுச்சேரி-கடலூர் சாலைக்கு மெகா திட்டம்! 13 கி.மீ. மேம்பாலம் அமைக்க ரூ.1,500 கோடி...

3 weeks ago 3
ARTICLE AD

புதுச்சேரி: புதுச்சேரி - கடலூர் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், முள்ளோடை எல்லை வரை 13.30 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் அமைக்க புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய அரசிடம் ரூ.1,500 கோடி கூடுதல் நிதி வழங்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பாக 2 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் பங்கேற்றார்.

அப்போது, கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் சந்தித்தார். அப்போது, முதல்வர் ரங்கசாமி எழுதிய கோரிக்கை கடிதத்தை மத்திய அமைச்சரிடம் வழங்கினார்.

13.30 கி.மீ. மேம்பாலமாக நீட்டிக்க திட்டம்

முதல்வர் ரங்கசாமி அனுப்பியுள்ள கடிதத்தில், புதுச்சேரி – கடலூர் சாலையை முள்ளோடை எல்லை வரை 13.30 கி.மீ. நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2.6 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ஏற்கனவே ரூ.650 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

ஆனால், புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதாலும், இதன் காரணமாக சாலைகளில் வாகனப் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், 2.6 கி.மீ. நீளத்திற்கு மட்டும் மேம்பாலம் அமைப்பது போக்குவரத்து நெரிசலை முழுமையாகக் கட்டுப்படுத்த போதுமானதாக இருக்காது என புதுச்சேரி அரசு கருதுகிறது.

இதையடுத்து, ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள 2.6 கி.மீ. மேம்பாலத்தை முழுமையாக 13.30 கி.மீ. தொலைவுக்கு நீட்டித்து அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக கூடுதலாக ரூ.1,500 கோடி நிதி தேவைப்படுவதாகவும், அந்த நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏனாம் சாலை மேம்பாட்டுக்கும் நிதி கோரிக்கை

இதுதவிர, புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பிராந்தியத்திலும் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது.

ஏனாம் பகுதியில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையை சீரமைத்து, மேம்படுத்துவதற்கு ரூ.8.89 கோடி நிதி வழங்க வேண்டும் என புதுச்சேரி அரசு கோரியுள்ளது.

இந்தச் சாலை மேம்படுத்தப்பட்டால், அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதி மேம்படுவதுடன், தேசிய நெடுஞ்சாலையுடன் இணைப்பு வசதியும் சிறப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணிகளை விரைந்து முடிக்க உறுதி

மத்திய அரசின் நிதியுதவியுடன் புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை பொதுப்பணித்துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாக முதல்வர் ரங்கசாமி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய அரசின் நிதியுதவியுடன் நடைபெறும் அனைத்து பணிகளும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முழுமையாக நிறைவு செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

நிதின் கட்கரி உறுதி

புதுச்சேரி அரசு முன்வைத்துள்ள கோரிக்கைகளை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பரிசீலித்ததாகவும், அவற்றுக்கு முன்னதாகவே ஒப்புதல் அளித்திருந்த நிலையில், திட்டங்கள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட உள்ள இந்தச் சாலை மற்றும் மேம்பாலத் திட்டங்கள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி - கடலூர் சாலையில் 13.30 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டால், குறிப்பாக வார இறுதி நாட்களில் அதிகரிக்கும் வாகன நெரிசலைக் குறைக்கவும், புதுச்சேரி - கடலூர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article