புதிய வீடு கட்ட போறீங்களா ? அஸ்திவாரம் போடும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க !!

1 month ago 6
ARTICLE AD

புதிய வீடு கனவு

புதிதாக வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கான ஒவ்வொரு விஷயத்திலும் முழுமையாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இப்போது தான் நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்றால் நிலம் சார்ந்த விஷயங்களில் தெளிவாக செயல்பட வேண்டும்.

பொதுவாக புதிய வீடு கட்டுவது என்றால், உங்களிடம் உள்ள நிலத்தின் அளவு, அமைப்பு போன்ற அடிப்படை விஷயங்களை முதலில் கவனியுங்கள். இதற்கு அடுத்தபடியாக, அந்த நிலத்தில் எந்த அளவுக்கு கட்டுமான பணிகள் மேற்கொள்ள அரசின் விதிகள் அனுமதிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதையடுத்து, உங்களுக்கான தேவை என்ன என்பதை குடும்பத்தினருடன் பேசி தெளிவாக முடிவு செய்யுங்கள்.

அறைகளின் எண்ணிக்கை முடிவு

உங்கள் குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை அவர்களின் வயது போன்ற விஷயங்களை கவனத்தில் வைத்து அறைகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விஷயங்களை முடிவு செய்யுங்கள்.

புதிய வீட்டுக்கான கட்டுமான பணிகளை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்தாலும், வரைபடம் தயாரிப்பு போன்ற பணிகளை கவனிக்க வேண்டும். கட்டுமான பணியில் அஸ்திவாரம் எங்கு எப்படி அமைய வேண்டும் என்பதை கட்டட அமைப்பியல் பொறியாளர் வழிகாட்டுதல் அடிப்படடையில் முடிவு செய்ய வேண்டும்.

இதில் சில ஆண்டுகள் முன்பு வரை, அஸ்திவாரத்துக்கான இடங்கள் கோடுகள் வாயிலாக அடையாளப்படுத்தப்பட்டன. அதில் ஆட்களை பயன்படுத்தி மேனுவல் முறையில் பள்ளம் தோண்டும் பணிகள் மேற்கொள்வது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது, அஸ்திவார பள்ளம் தோண்டும் பணியிலும், பொக்லைன் இயந்திரங்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

பள்ளம் தோண்டுவதற்கான பொக்லைன் இயந்திரம்

இந்த இயந்திரங்களை பயன்படுத்தும் நிலையில், வரைபடத்தில் குறிப்பிட்ட அளவுகளுக்கு உட்பட்டு பள்ளம் தோண்டும் பணிகள் நடக்க வேண்டும். இயந்திரங்களை பயன்படுத்தி பள்ளம் தோண்டுவதில் எந்த விதத்திலும் தவறு என்று கூற முடியாது. ஆனால், நீங்கள் பயன்படுத்தும் இயந்திரத்தில் மண் அள்ளுவதற்கான பக்கெட் அமைப்பு பெரியதாக இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

பெரிய பக்கெட் அமைப்பு உள்ள வாகனங்களை பயன்படுத்தினால், திட்டமிட்டதை விட அதிக அகலத்தில் அஸ்திவார பள்ளம் தோண்டும் நிலை ஏற்படும். இது கட்டுமான பணிகளுக்கு இடையூறாக அமைய வாய்ப்புள்ளது என்பதை உரிமையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை பொறியாளர்கள். அஸ்திவாரம் அமையும் இடங்களை கோடுகள் வாயிலாக அடையாளப்படுத்திய நிலையில் கோடுகளுக்குள் மட்டுமே பள்ளம் தோண்டுவதற்கு ஏற்ற வகையில் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்.

Read Entire Article