பிரியாணி கடையில் தொடங்கிய காதல்... ஜெயிலில் முடிந்த கதை - நடந்தது என்ன?

1 month ago 4
ARTICLE AD

திருப்பத்தூரில் 16 வயது சிறுமியை காதல் திருமணம் செய்த பிரியாணி மாஸ்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் சேர்ந்த 16 வயது சிறுமி காணவில்லை என கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெற்றோர் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

கோட்டை தெரு பகுதியைச் சேர்ந்த மகமுத்கான் மகன் ரஹீம் (22) என்பவர் பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வருகிறார். பின்னர் அந்த சிறுமியும் ரஹீம் உள்ளிட்ட இருவரும் காதலித்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து , திருமணம் செய்துகொண்டு தலைமறைவாக இருந்த இருவரையும் திருப்பத்தூர் நகர போலீசார் கண்டு பிடித்தனர். மேலும், போலீசார் ரஹீம் மீது போக்சா சட்டத்தின் வழக்கு பதிந்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

16 வயது சிறுமியை காதல் திருமணம் செய்த பிரியாணி மாஸ்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போக்சோ சட்டம்

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்), (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) என்பது , இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதனைச் சுருக்கமாக போக்சோ சட்டம் அல்லது போக்ஸோ சட்டம் என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் , மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம்தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இச்சட்டம் வரும் முன் , குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவுகள், குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளைக் கையாண்டன.

போக்சோ சட்டத்தின் அம்சங்கள்

18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச் சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன் புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும். இது மிகத் தேவையானது. சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங் காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என சட்டம் குறிப்பிடுகிறது.

சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது. மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல் துறை பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

Read Entire Article