பிரியங்கா காந்தி சென்ற கான்வாய் நடுவே காரை நிறுத்திய நபர்: துண்டாக தூக்கிய போலீஸ்

8 months ago 6
ARTICLE AD

கேரளாவில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சென்று கொண்டிருந்த ( கான்வாய் ) பாதுகாப்பு வாகனங்களை தடுத்ததாகக் கூறி, ஒரு யூடியூபர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்திருக்கின்றனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக எலநாடு பகுதியைச் சேர்ந்த அனீஷ் ஆபிரகாம் என்பவரை மன்னுத்தி போலீசார் கைது செய்து, பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர். அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரியங்கா காந்தி, கடந்த சனிக்கிழமை இரவு 9:30 மணியளவில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு, மலப்புரத்திலிருந்து கொச்சி விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, மன்னுத்தி பைபாஸ் சந்திப்பில் இந்தச் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

வயநாடு எம்.பி பிரியங்கா காந்தியை அழைத்துச் சென்ற வாகனத்தின் ஹாரன் சத்தத்தால் ஆபிரகாம் விரக்தியடைந்ததாகவும், இதனால் வாகன கான்வாய்க்கு முன்னால் அவரது நிறுத்தியதாகவும் அவர தர்ப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது, மன்னுத்தி துணை ஆய்வாளர் தலைமையிலான காவல் குழு  அகற்ற முயன்றபோது, ​​அவர் காவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து வேண்டுமென்றே  வாகனத் தொடரணியைத் தடுத்தமை, உயிருக்கு ஆபத்து விளைவித்தமை மற்றும் காவல் உத்தரவை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக ஆபிரகாம் மீது அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு சூழ்ந்தது.

Read Entire Article