பிரச்சாரத்திற்கு வராதீங்க.. ராகுல் போட்ட ORDER? சமாளிக்கும் செ.பெருந்தகை? - நடந்தது என்ன.?

1 month ago 5
ARTICLE AD

ராகுல்காந்தி பேச்சை தப்பு தப்பாக மொழிபெயர்த்து ட்ரோலில் சிக்கிய செல்வப்பெருந்தகையால் கடும் கோபமான ராகுல் இனி என்னுடைய பிரச்சாரத்திற்கே வரக் கூடாது என ஆர்டர் போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால்தான் வருமான வரித்துறை சோதனை என சொல்லி செல்வப்பெருந்தகை நாடகம் ஆடியுள்ளதாக எதிர் தரப்பினர் அட்டாக் செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் நாளையுடன் பிரச்சாரம் நிறைவடையும் நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இன்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து குளச்சல், நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்தநிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நடந்த கூட்டத்தில் ராகுலின் பேச்சை செல்வப்பெருந்தகை தப்பு தப்பாக மொழிபெயர்த்தது ட்ரோலில் சிக்கியது. ராகுல் பேசியவற்றிற்கு துளியும் சம்பந்தமே இல்லாத விஷயங்களையே மொழிபெயர்த்து சொன்னார் செல்வப்பெருந்தகை.

இந்த விவகாரம் ராகுலுக்கு தெரியவந்ததும் கடும் கோபமானதாக சொல்கின்றனர். இனி நான் கலந்து கொள்ளும் பிரச்சாரம் பக்கமே வரக் கூடாது என செல்வப்பெருந்தகைக்கு ஆர்டர் போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகின. சீருடை இல்லாமல் வருமான வரித்துறையினர் என சொல்லிக் கொண்டு ஹிந்தி பேசும் நபர்கள் வீட்டில் சோதனை நடத்துவதாகவும் ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்கு செல்ல முடியாத வகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார் செல்வப்பெருந்தகை.

இந்த சோதனைக்கு தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். செல்வப்பெருந்தகை கூறியது போல் அவரது வீடு உள்ளிட்ட எங்கும் சோதனை நடத்தவில்லை என்றும் ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்கு செல்லவிடாமல் தடுத்ததாக செல்வப்பெருந்தகை கூறுவதும் உண்மையில்லை என்றும் சொல்லி வருமான வரித்துறை பரபரப்பை கிளப்பியுள்ளது.

வருமான வரித்துறையால் தான் ராகுல்காந்தியின் பிரச்சாரத்திற்கு போக முடியாமல் போனதாக செல்வப்பெருந்தகை சொன்ன நிலையில், அதற்கு வருமான வரித்துறை தரப்பில் இருந்து மறுப்பு வந்துள்ளதால், உண்மையான காரணம் ராகுல்காந்தியின் கோபம் தானா என்று எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்புகின்றன. அதனை மறைக்க தான் வருமான வரித்துறை சோதனை என செல்வப்பெருந்தகை நாடகம் ஆடியுள்ளதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது ராகுல் காந்தியின் இன்றைய கூட்டத்திற்கு தனக்கு அழைப்பில்லை என்ற உண்மை வெளிவந்தால், இன்னும் அசிங்கமாகிவிடும் என்ற பதட்டத்தில், திரு. செல்வப்பெருந்தகை, இன்று காலை, தனது வீட்டில் வருமானவரி சோதனை நடப்பதாகவும், தன்னை வீட்டிற்குள்ளேயே சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் ஒரு நாடகமாடினார்” என தெரிவித்துள்ளார்.

பிரச்சாரத்தில் செல்வப்பெருந்தகை ஆப்செண்ட் ஆகியுள்ளதற்கு ராகுல் காந்தியின் ஆர்டர் தான் காரணமா என சமூக வலைதளங்களில் விவாதம் நடந்து வருகிறது.

Read Entire Article