பாவை விளக்காய் ஒரு தாய்க்கிழவி... 112 வருடங்களாக ஒளி வீசும் ரகசியம் குறித்து தெரியுமா?

3 weeks ago 2
ARTICLE AD

இரு கையும் சேர்த்து விளக்கு ஏந்திய நிலையில் வடிக்கப் பெற்றுள்ள இச்சிலையானது, தலை முடி கொண்டையிட்டு நெற்றியில் திருநீற்றுப்பட்டையுடன் குங்கும திலகம் இட்டு காதில் காதணி, தண்டட்டி தொங்கும் நிலையில் கழுத்தில் மாங்கல்யமும்  கழுத்தணியும் வடிக்கப்பட்டுள்ளன.

கோயில்களில் விளக்கேற்றுவது மிகவும் அவசியமானதாக இருந்தது

இறைவனை மனமுருகி வழிபட விளக்கு ஏற்றி வழிபடுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தனக்கென்று ஒரு துன்பம் வரும்போது கோயிலுக்குச் சென்று வாரங்களாக, மாதங்களாக தொடர்ந்து விளக்கு ஏற்றுவதை பெண்கள் கடைப்பிடித்தும் வருகின்றார்கள். பொதுவாக பெருங்கோயிலாக இருந்தாலும் சிறு கோயில்களாக இருந்தாலும் அன்றைய மின்சாரம் இல்லாத காலங்களில் விளக்கேற்றுவது மிகவும் அவசியமானதாக இருந்தது. ஆகவே தான் அரசர்களும் விளக்கு ஏற்றுவதற்காக நிவந்தமாக சாவா மூவா பேராடுகளை வழங்கி நெய்யைப் பெற்று விளக்கு ஏற்றி வந்துள்ளனர். இச்செய்தி பல கல்வெட்டுகளால் அறிய முடிகிறது. வழிபாட்டின் போது பல அலங்கார விளக்குகளும் இறைவனின் முகம் காண ஆரத்தியாக காட்டப்படுவதுண்டு.

விளக்குகளில் பாவை விளக்கு என்பது ஒரு தனிப்பட்ட வகையின தாகும்.

பாவை ஆகிய பெண் தனது இரு கையாலும் விளக்கை ஏந்திய வடிவில் அமைக்கப் பெறும் இவ்விளக்குகள் நேர்த்திக்கடனாகவும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இது குறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநர், புலவர் கா.காளிராசா நம்மிடம் விளக்கினார்.

திருவிடைமருதூரில் புகழ்பெற்ற பாவை விளக்கு.

கும்பகோணம் அருகே உள்ள, திருவிடைமருதூரில் மராட்டிய மன்னன் பிரதாப சிம்மனின் மாமன் மகளான அம்முனு அம்மணி, மன்னன் பிரதாப சிம்மனை விரும்பினார் இருவரும் விரும்பி வந்த நிலையில் திருமணத்திற்கு முன்பே நோய்வாய்ப்பட்டு மன்னன் பிரதாபசிம்மன்  இறந்து போனான். பிரதாப சிம்மன் மீது அளவில்லா காதல் கொண்ட அம்மு அம்மணி திருமணமாகாவிட்டாலும் அவனையே கணவனாக ஏற்று கைம்மை நோன்பு நோற்றாள். அவன் இறந்து நான்காண்டுகளுக்குப் பின்னர் திருவிடை மருதூர் மகாலிங்கம் கோயிலில் இலட்ச தீபம் ஏற்ற ஏற்பாடு செய்தாள், அதில் இராஜகுமாரியாக அனைத்து அணிகலங்களும் பூண்ட நிலையில் தன்னையே விளக்குப் பாவையாக செய்வித்து திருவிடைமருதூர் இறைவனார் மகாலிங்கம்  முன்பு விளக்கு எரியச் செய்தாள். இச்செய்தி அவ்விளக்குப் பாவையின் கீழ் பொறிக்கப்பட்டுள்ளது. அதைப் போல திருப்பாச்சேத்தி யின் பாவை விளக்கில் எழுதப்பட்டுள்ள செய்தியைக்கொண்டு விளக்குப் பாவையாக ஒரு தாய்க்கிழவி நிற்கிறாள் என்பதை அறிய முடிகிறது.

திருப்பாச்சேத்தி சிவன் கோவிலில் விளக்குப் பாவை சிலை.

இரு கையும் சேர்த்து விளக்கு ஏந்திய நிலையில் வடிக்கப் பெற்றுள்ள இச்சிலையானது, தலை முடி கொண்டையிட்டு நெற்றியில் திருநீற்றுப்பட்டையுடன் குங்கும திலகம் இட்டு காதில் காதணி, தண்டட்டி தொங்கும் நிலையில் கழுத்தில் மாங்கல்யமும்  கழுத்தணியும் வடிக்கப்பட்டுள்ளன. இடுப்பிற்குக் கீழ்  அழகு பொருந்திய அரையாடை வடிக்கப் பெற்று காலில் தண்டை போன்ற காலணி காட்டப்பட்டுள்ளது. இச்சிலையானது சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த சு.முனியாண்டியா பிள்ளை என்பவரது மனைவி சுந்தரத்தம்மாள் என்பதும் இச்சிலை 1914 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி வழங்கப்பட்டு இருக்கிறது. என்பதையும் இச்சிலையின் கீழே எழுதப்பட்டுள்ள எழுத்துப் பொறிப்பின் படி அறிய முடிகிறது. திருப்பாச்சேத்தியை சேர்ந்த சு. முனியாண்டியா பிள்ளை தனது மனைவியின் நினைவாக தனது மனைவி எப்போதும் இறைவனை வணங்கும் நிலையில் விளக்குப்பாவை சிலையாக வடித்துத் தந்துள்ளார். இவ்வம்சா வழியினர் இன்றும் இச்சிலையை தங்களது பாட்டி என தம் முன்னோர்கள் சொல்லி வந்ததைக் கூறுகின்றனர். 112 ஆண்டுகள் பழமையான சிலையின் பின் உள்ள எழுத்துப் பொறிப்பை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

Read Entire Article