<p>தமிழ் திரைப்படத்துறையில் பிரபல நடன இயக்குநராக உள்ள ஜானி மாஸ்டர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் நடன இயக்குநர் அளித்த பாலியல் புகாரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தன்னுடைய 16 வயதில் ஜானி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த நடன இயக்குநர் புகார் தெரிவித்திருந்தார். </p>
<p>தேசிய விருது பெற்றுள்ள ஜானி, தெலுங்கு திரைப்படத்துறையில் பணியாற்ற ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது.</p>