பாரதிராஜாவை நினைத்து கண்கலங்கிய வைரமுத்து; X தளத்தில் பதிவிட்ட உருக்கமான கவிதை வைரல்!

4 months ago 10
ARTICLE AD

தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான் இயக்குநர் பாரதிராஜா அண்மையில் மறைந்த நிலையில், அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய கவிஞர் வைரமுத்து, அங்கு மணிமண்டபம் அமைக்கக் கோரி தமிழக முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்கவும் தயங்கமாட்டேன் எனத் தெரிவித்து X தளத்தில் உருக்கமான கவிதை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மேலும், பாரதிராஜா மணி மண்டபம் அமைந்தால், தேனியில் தேவர்கள் பூச் சொரிவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்த 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா ஜூன் 10-ம் தேதி காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திய கவிஞர் வைரமுத்து, பாரதிராஜாவின் நினைவைப் போற்றும் வகையில் அரசு மணிமண்டபம் கட்ட வேண்டும் எனத் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கவிதை மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது X பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

“இமயத்தைப்
புதைத்த இடம் இதுதான்

தூங்கு ராஜா தூங்கு

ஓடி ஓடிக் களைத்தவனே
கலையாத உறக்கத்தில்
கனவுகளற்ற உறக்கத்தில்
ஓய்வுகொள்

மண்ணை இழுத்துப் போர்த்துப்
படுத்திருக்கும் உன்னை
குளிரோ மழையோ
வெயிலோ புயலோ
ஒன்றும் செய்யாது

நலம் கேட்க வந்த நான்
நல்லசெய்தி
கொண்டுவரவில்லை

இதே இடத்தில்
என்னோடு நின்று
இறுதி மரியாதை செலுத்திய
உன் சீடன்
உனைத்தேடி வந்துவிட்டான்

ஜோடிக் குதிரைகளை இழந்து
கவிழ்ந்து கிடக்கிறது
கலைத்தேர்

கடமை இருக்கிறது

இந்த மண்ணகத்தில்
உனக்கொரு மணிமண்டபம்;
அரசுக்குக்
கோரிக்கை வைக்கிறேன்

முதலமைச்சர் விஜயைச்
சந்திக்கவும் தயங்கமாட்டேன்

இந்த இடம் கலைக்கோயிலாக என்று கட்டப்படுமோ அன்று தேனி மாவட்டம் முழுக்க தேவர்கள் பூச்சொரிவர்” என்று பதிவிட்டுள்ளார்.

பாரதிராஜாவுடனான தனது நட்பையும், அவரது கலைப் பயணத்தையும் நினைவுகூர்ந்து கவிதை வடிவில் முதலமைச்சருக்குத் தனது கோரிக்கையை வைரமுத்து முன்வைத்துள்ளார். இந்த விவகாரத்திற்காகத் தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்திக்கவும் தான் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Read Entire Article