பாமக-வில் பறிபோகும் அன்புமணி பதவி? அதிகாரத்தை இவரிடமா தரப்போகிறார் ராமதாஸ்?

4 months ago 4
ARTICLE AD

அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், வட தமிழகத்தில் மிகப்பெரிய வாக்கு வங்கியை கொண்டுள்ள பாமக தந்தை - மகன் பிரச்சினையால் முழுமையாக பிளவுபட்டுள்ளது.

அதிகார சண்டையில் அன்புமணி - ராமதாஸ்:

கட்சியில் அதிகாரம் யாருக்கு? கூட்டணி முடிவை எடுக்கப்போவது யார்? என்பதில் ராமதாஸ் - அன்புமணி இடையே சண்டை உச்சத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தான் பதவிக்கு ஆசைப்படவில்லை என்றும் ராமதாஸ் தற்போது கட்சியை நிர்வகிக்க இயலாத நிலையில் இருக்கிறார் என்று அன்புமணி கூறிய நிலையில், தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக்கூடாது என்று பேசிய ராமதாஸ் தற்போது அடுத்தகட்ட திட்டத்திற்கு தயாராகியுள்ளார்.

தனது மகனாகிய அன்புமணிக்கு எதிராக வலுவான போட்டியாளரை இறக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருந்த ராமதாஸ் அவருக்கு போட்டியாக தனது மகள் ஸ்ரீகாந்திமதியை இறக்க திட்டமிட்டிருந்தார். இதுவரை கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்த ஸ்ரீகாந்திமதி சமீபகாலமாக பாமக நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். பூம்புகாரில் நடந்த வன்னியர் மகளிர் மாநாட்டிலும் ஸ்ரீகாந்தி மதி பேசினார்.

அன்புமணி பதவியை பறிக்க திட்டம்:

இந்த நிலையில், வரும் 17ம் தேதி ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக -பாஜக கூட்டணியில் இடம்பிடிக்க அன்புமணியும், திமுக கூட்டணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று ராமதாசும் அடம்பிடிப்பதும் இவர்களது மோதலுக்கு முக்கிய காரணம்.

இந்த சூழலில், 17ம் தேதி நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுக்க உள்ளார். அதாவது, தற்போது ராமதாசால் செயல்தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணியின் செயல் தலைவர் பதவியை பறிக்க தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளனர். மேலும், அவரது செயல் தலைவர் பதவியை தனது மகள் ஸ்ரீகாந்திமதிக்கு வழங்கவும் ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இல்லாவிட்டால் வன்னியர் சங்கத்தில் பதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

உளவுத்துறை ரிப்போர்ட்:

அன்புமணிக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை அந்த பொதுக்குழுவில் நிறைவேற்ற ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். குடும்ப சண்டையின் உச்சத்தில் பாமக பிளவுபட்டு நிற்பது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ.க்கள், பாமக மாவட்டச் செயலாளர்கள் பெரும்பாலோனார் அன்புமணியின் ஆதரவாளர்களாக உள்ளனர்.

ஆனாலும், பாமக-வை உருவாக்கியவர் என்ற பெருமையும், இந்த கட்சியை மிகப்பெரிய அளவில் வளர்த்தவர் என்ற பெருமையும் ராமதாசுக்கே இருப்பதால் அவருக்கு வன்னிய சமுதாய மக்களிடம் அன்புமணியை காட்டிலும் அதிக செல்வாக்கு இருப்பதாக உளவுத்துறை ஏற்கனவே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையின்போது பாஜகவிற்கு அறிக்கை தாக்கல் செய்தது.

மாம்பழம் யாருக்கு?

ராமதாஸ் நடத்தப்போகும் பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு பாமகவில் தந்தை - மகன் மோதல் உச்சகட்டத்திற்குச் செல்லும் என்றே கருதப்படுகிறது. இதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் மாம்பழ சின்னம் கொண்ட பாமக யார் வசம் இருக்கப்போகிறது? என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது. அதேசமயம் இவர்களது சண்டையை முடிவுக்கு கொண்டு வந்த ஒருங்கிணைந்த பாமக-வாக ஏதேனும் ஒரு பக்கம் கூட்டணி அமைக்க மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அந்த முயற்சிகளும் தொடர் தோல்வியிலே முடிந்து வருகிறது.

Read Entire Article