பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... அன்புமணி ஆப்சென்ட்? என்ன செய்யப் போகிறார் ராமதாஸ்?

7 months ago 5
ARTICLE AD

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் இல்லத்தில் இன்று காலை 10 மணிக்கு பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் வருகை தொடங்கியது.

பாமகவின் ‘சித்திரை முழு நிலவு’ மாநாடு கடந்த 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த மாநாட்டில் மருத்துவர் ராமதாஸ் பேசியவற்றுக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் காலை 10 மணிக்கு பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி முடிவுகள், தேர்வுப் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், கட்சிப் பொறுப்பாளர்கள் என அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், இந்தக் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்தக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்துகொள்ளமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்டு செயல் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதன் காரணமாக பாமகவின் ‘சித்திரை முழு நிலவு’ மாநாட்டிலும் அன்புமணி தனது வருத்தத்தை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி கலந்துகொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தைலாபுரம் தோட்டத்திற்கு மாநில தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேகநாதன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் பி ஜி அண்ணாமலை, கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட தலைவர் தியாகராஜ நாயுடு ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

Read Entire Article