சினிமாவை தாண்டி சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. காலங்கள் சென்றாலும் நடிகைகளின் கதாப்பாத்திரங்கள் மக்களை அசைபோட வைக்கும். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் மூலம் பிரபலம் அடைந்தநர் காவ்யா அறிவுமணி. விஜே சித்ராவிற்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

வெள்ளித்திரையில் அறிமுகம்

சீரியல்களின் மூலம் மக்களின் அன்பை பெற்ற காவ்யா மாறன், அடுத்ததாக திரைப்படங்களிலும் நடிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டார். அவரது ஆசைப்படியே மிரள், ரிப்பப்பரி, நிறம் மாறும் உலகில் போன்ற படங்களில் நடித்து அசத்தினார். தற்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகியிருப்பதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் இவர் சீரியல்களில் நடிக்க மறுத்ததற்கான காரணம் குறித்தும் தெரிவித்திருந்தார். அதில், நானும் மற்றவர்களை போல நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் தான். சின்ன திறையில் நடித்தாலும் ஸ்டார் நடிகர் ஆக வேண்டும் என்பது தான் எனது கனவு என தெரிவித்திருக்கிறார்.

காவ்யா பெருமிதம்

தற்போது கவின் நடிக்கும் ஒரு படத்தில் நடித்து வரும் காவ்யா அறிவுமணி தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். அதில், பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று செய்தித்தாள்களிடம் இடம்பெற வேண்டும் என்ற கனவோடு இருந்தேன். அது நடக்காத நிலையிலும் தற்போது நான் ஒரு நடிகையாக தனது புகைப்படங்கள், நேர்காணல்கள் செய்தித்தாள்களிடம் இடம்பெறுவதை பார்க்கும் போது பெருமிதமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

அதிக படங்களில் நடிக்கிறேன்

நாம் ஒரு திட்டத்தை வைத்திருந்தால் விதி வேறொரு திட்டத்தை நமக்காக வைத்திருக்கிறது. இதில், எனது முழு நம்பிக்கையும் சினிமாவாக இருந்திருக்கிறது. அந்த கனவும் தற்போது நிறைவேறியுள்ளது. எதிர்காலத்தில் அதிக படங்களில் நடிக்க ஆவலோடு காத்திருக்கிறேன். அதுதொடர்பான செய்திகளையும் வெளியாவது மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். மகிழ்ச்சியில் இருக்கும் காவ்யா அறிவுமணி அண்மையில் சினிமா குறித்து அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. இதில், எனது சிறு வயதில் நாடகங்களில் நடித்து படிப்படியாக சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

குடும்ப சுமை

சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருந்தபோது படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், உடனடியாக அதில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. என்னை நம்பி என் குடும்பம் இருக்கிறது. இரண்டு சகோதரிகள் கல்லூரி படிப்பை முடிக்க வேண்டும். குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியால் சின்னத்திரையில் தொடர்ந்து நடித்து வந்தேன். சினிமாவிற்கான கனவை நினைத்து பார்க்க நேரம் இல்லை என தெரிவித்திருந்தார்.