அனுராக் கஷ்யப்

தேவ் டி , அக்லி , பாஞ்ச் , பிளாக் ஃப்ரைடே , கேங்ஸ் ஆப் வாஸீப்பூர் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் அனுராக் கஷ்யப். இவரது பல படங்கள் திரையரங்கில் வெளியாவதற்கு முன்பாகவே தடை செய்யப்பட்டுள்ளன. இரண்டு பாகங்களாக இவர் இயக்கிய கேங்ஸ் ஆப் வாஸீப்பூர் உலகம் முழுவதிலும் உள்ள சினிமா ரசிகர்களை கவர்ந்த திரைப்படம். பாலிவுட் சினிமாவையும் பாலிவுட் நடிகர்களின் மீதும் தொடர்ச்சியாக காத்திரமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் அனுராக் கஷ்யப்.

பாலிவுட் விட்டு வெளியேறிய அனுராக்

தரமான படங்களை இயக்கியும் தனது படங்களை வெளியிட பல சவால்களை சந்தித்து வந்த அனுராக் கஷ்யம் தென் இந்திய சினிமா பக்கம் கவனம் செலுத்த தொடங்கினார். நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக தொடங்கி மகாராஜா படத்தில் வில்லனாக நடித்தார். தான் பாலிவுட் சினிமாவை விட்டு வெளியேறுவதாகவும் தென் இந்திய சினிமாவில் கவனம் செலுத்த இருப்பதாகவும் அனுராக் கஷ்யப் அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருவதுடன் படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். வெற்றிமாறனின் உதவி இயக்குநர் வர்ஷா பரத் இயக்கியுள்ள பேட் கர்ல் படத்தை வெற்றிமாறனுடன் இணைந்து வழங்குகிறார்.

பான் இந்திய படங்கள் ஒரு ஸ்கேம்

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அனுராக் கஷ்யம் பான் இந்திய படங்கள் பற்றி பேசினார் . அப்போது பான் இந்திய படங்கள் என்பது ஒரு மோசடி. இப்படங்கள் அர்த்தமுள்ள கதைகளை சொல்வதைவிட லாபம் சம்பாதிப்பதற்கான நோக்கத்துடன் மட்டுமே எடுக்கப்படுகின்றன என அவர் குற்றம் சாட்டினார். " பிரம்மாண்ட பொருட்செலவில் செட் அமைக்கப்பட்டு , நூற்றுக்கணக்கானவர் இந்த படங்களில் வேலை செய்கிறார். 3 முதல் 4 ஆண்டுகள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் வெறும் 1 சதவீதம் மட்டுமே பலனளிக்கிறது. " என அவர் கூறினார்

அனிருத் இசையை கழுவி ஊற்றிய அனுராக் கஷ்யப்

தொடர்ந்து பேசிய அனுராக் கஷ்யப் தெலுங்கு சினிமாவில் உருவாகும் பான் இந்திய படங்களுடன் தற்போது தமிழ் படங்களும் போட்டி போட தொடங்கி இருக்கின்றன. திடீரென்று தமிழில் வரும் எல்லா பாடல்களும் ஆங்கிலத்தில் இருக்கின்றன. ஏதோ மேற்கு ராக் இசையைக் கேட்பது போல் ஆங்கிலத்தில் பாடல் வரிகள் இருக்கின்றன. ஒரு காலத்தில் தமிழில் வெளியான ராஜா பாடல்களை கேட்டு நாங்கள் அதை இந்தியில் பயண்படுத்துவோம். ஆனால் இன்று வெளியாகும் பாடல்கள் எந்த அர்த்தமும் இல்லாமல் இருக்கிறது. " என அவர் தெரிவித்துள்ளார்

Anirudh ??? pic.twitter.com/kfSktRZruW

— VVK (@VKrishna_V) May 11, 2025

இசையமைப்பாளர் அனிருத் பாடல்களை குறிப்பிட்டே அவர் சொல்வதாக ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கூறி வருகிறார்கள்.