பாஜகவுடன் தானே கூட்டணி வைத்தோம்! பாகிஸ்தானுடனா.. கூட்டணி வைத்தோம்? கடுப்பான செல்லூர் ராஜு !

1 week ago 2
ARTICLE AD

திமுக கூட்டணி வைத்தால் இனிக்கும் அதிமுக கூட்டணி வைத்தால் கசக்குமா? பாஜகவுடன் தானே கூட்டணி வைத்தோம்! பாகிஸ்தானுடனா? கூட்டணி வைத்தோம் செல்லூர் ராஜு ஆவேச கேள்வி.

தேர்தல் பணிமனை அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜு திறந்து வைத்தார்.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்காம தேர்தல் பணிமனை அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். "திமுக பாஜக உடன் கூட்டணி வைத்தால் இனிக்கும், அதுவே நாங்கள் வைத்தால் கசக்குமா? நாங்கள் பாஜகவுடன்தான் கூட்டணி பாகிஸ்தானுடன் கூட்டணி வைத்தோம், சிறுபான்மையினரின் வாக்குகள் இத்தேர்தலில் திமுகவிற்கு கிடைக்க வாய்ப்பில்லை. அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினர்கள், இந்துக்கள் கிறிஸ்தவர்கள், என அனைத்து மதத்திற்கு தேவையானவற்றை செய்து கொடுத்து இருக்கிறோம். எனவே, மதுரையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக கண்டிப்பாக கைப்பற்றும்.

மக்கள் பெருவாரியான ஆதரவை அளிக்கிறார்கள்.

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் கடந்த நான்கு நாட்களாக மக்களை சந்தித்து வருகிறேன். மக்கள் பெருவாரியான ஆதரவை அளிக்கிறார்கள். மேற்கு தொகுதியில் திமுக கட்டம் கட்டி வேலை பார்த்தாலும் ஒரு சாமானிய ஊழியனாக மக்கள் பணியாற்ற வருகிறேன். முதல்வர் என் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்யட்டும் ஆனால் மதுரைக்கு என்ன திட்டங்களை செய்தோம் என கூறி வாக்கு கேட்கின்றனர். இந்தியன் டூ படத்துக்கு விளம்பரம் கொடுத்தார்கள். ஆனால் படம் என்ன ஆனது தாய்க்கிழவி படம் பட்டய கிளப்புகிறது நன்றாக ஓடுகிறது என கூறினார்.

மற்றவர்கள் பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை

அதேபோல கனிமொழி சிறந்த, எழுத்தாளர் இலக்கியவாதி ஆனால் அண்ணனுக்கு பில்டப் போதாது. அதிக அளவு டாஸ்மாக் கடையை திறந்து வைத்திருக்கிறார்கள் இதுவே 2021 தேர்தலின் போது தமிழ்நாட்டில் இளம் விதவைகள் அதிகமாகி விட்டார்கள் என கூறினார். தற்பொழுது அது பற்றி பேசாதது ஏன் இளம் தலைமுறை போதைக்கு அடிமையாகிறார்கள் இந்த தேர்தலில் இந்தி கூட்டணிக்கும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடையே தான் போட்டி மற்றவர்கள் பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை", என கூறினார்

Read Entire Article