"பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள்"..ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!

9 months ago 9
ARTICLE AD

பாஜகவால் தோற்றோம் , பாஜக நோட்டா கட்சி என கூறியவர்கள் எல்லாம், தற்போது கூட்டணிக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காட்டமாக அதிமுகவை விமர்சித்திருக்கிறார்.

அதிமுகவை தாக்கி பேசிய அண்ணாமலை:

தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணியை என்ற பேச்சுக்கே இடமில்லை என அதிமுகவின் பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் , சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு , எங்களுக்கு ஒரே எதிரி திமுக என இபிஎஸ் பதிலளித்தார்.

மேலும், இரு தினங்களுக்கு முன்பு அண்ணமலை தெரிவிக்கையில், “ அதிமுக கட்சி எங்களுக்கு எதிரி இல்லை என தெரிவித்தார். ஆனால், இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, திடீரென இபிஎஸ் தலைமையிலான அதிமுகவை காட்டமாக மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார்.

இன்று அண்ணாமலை பேசியதாவது , “ பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டார் கட்சி என்றும் மற்றும் பாஜகவால்தான் தோற்றோம் என்று கூறியவர்கள் , இன்று எங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி பலமாகி கொண்டே இருக்கிறது.

முதல்வர் வேட்பாளர்:

இக்கட்டான் சூழ்நிலையில் வந்தவர் தினகரன். பாஜக கூட்டணியில் உள்ள தினகரனுக்கு பாஜக நன்றியுடன் இருக்கும்.

மேலும், இபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளர் தலைமையில்தான் கூட்டணி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி .உதயக்குமார் தெரிவித்த நிலையில்,  பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்பது குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அதிமுகவை சிறுமைப்படுத்தும் விதமாக , அண்ணாமலை பேசு வேண்டிய திடீர் சூழல் ஏற்பட்டதற்கான காரணம் என்ன, அதிமுக - பாஜக கூட்டணி முயற்சி எதிராக போக்கிற்கு சென்றுவிட்டதா என்றும் கேள்வியை எழுப்பியிருக்கிறது, அண்ணாமலையி பேச்சு.

Read Entire Article