விழுப்புரம் : தேர்தல் ஆணையம் மட்டுமல்ல எல்லாவற்றையும் பாஜக சுற்றி வளைத்திருபதாகவும் தமிழ் மண்ணில் பதற்ற அரசியலை பாஜக சுமந்து வருவதாகவும், பாஜகவுடன் இணைந்ததால் அதிமுகவிற்கான இயல்பான வாக்கை அதிமுக இழந்து உள்ளதாக சி பி ஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு தமிழகத்தில் வெற்றி அலை வீசுவதாகவும், நாடாளுமன்ற தேர்தல் மறுவரை மசோதாவின் தோல்விற்கு பிறகு இந்த அலை அதிகரித்துள்ளதாக கூறினார். நாடாளுமன்றம் கூட்டத்தை கூட்டி பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளதாகவும் 33 சதவிகித இடஒதுக்கீடு என்பது பெண்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிப்பதாகவும், எப்போதுமே பெண்கள் அரசு அதிகாரத்திற்கு வரவேண்டும் கொள்கையுடன் இணைந்து பெண்களுக்கு அதிகாரம் வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும், பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க முதல் இயக்கமாக நாங்கள் இருப்போம் என கூறினார்.

அதிமுக கட்சி ஒரு ஜனநாயக கட்சி அதிலுள்ள எடப்பாடி பழனிச்சாமியிடம் அரசியல் அனுமாந்தம் அரசியல் இல்லை பாஜகவின் கரத்தை பற்றி விட்டதால் அவர் 20 தொகுதிகள் அல்ல முழுமையாக அனைத்தையும் இழந்து தோல்வி அடைவார் என தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் கற்பழிப்பு சம்பவங்கள், கஞ்சா போன்றவை கொஞ்சமாக இருந்தது என பிரேமலதா தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் வார்த்தைகளில் இடறி பேசியிருப்பார் அதனை அரசியலாக்க வேண்டாம் என வலியுறுத்தினார். திமுக ஆட்சி பிறமாநிலங்களில் ஒப்பிடும்போது நல்லாட்சியாக உள்ளதாகவும், சகோதரர் அன்புமணி சொல்வது போல் சென்னை கொலை நகரம் இல்லை எங்கு பார்த்தாலும் பாலியல் தொல்லை இல்லை இருண்ட ஆட்சி என்று அவர் சொல்வது உத்தரபிரதேசம் பீகாரை பார்த்து சொல்லி இருக்க வேண்டும் அவர் இடறி தமிழ்நாட்டை சொல்வதாக தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் மட்டுமல்ல எல்லாவற்றையும் பாஜக சுற்றி வளைத்திருபதாகவும் எந்த நாடாளுமன்றத்தில் எந்த நாட்டிலும் இல்லாத சுடர் விடுகின்ற ஜனநாயகம் இந்தியாவில் உள்ளது நீதித்துறை தேர்தல் ஆணையம் உள்துறை போன்றவற்றில் அரசு தலையீடு இருக்க கூடாது ஆனால் எல்லாவற்றிலும் பாஜக சுற்றி வளைத்து நாடாளுமன்ற நிறுவனங்களின் கழுத்தை நெறிப்பதாக கூறினார். தனிநபர் விமர்சனத்தை எடப்பாடி பழனிச்சாமி வைப்பது கண்ணியமல்ல நேர்மை அல்ல அரசியல் அல்ல இன்றைய தேவை அரசியல்,மாநிலத்தின் முன்னேற்றம் கொள்கை திட்டங்களை அவரிடத்தில் எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் யார் வரவேண்டும் யார் வர கூடாதென மக்கள் தெளிவாக உள்ளதாகவும் அமைதியாக இருக்கிற தமிழ் மண்ணில் பதற்ற அரசியலை பாஜக சுமந்து வருவதாகவும், பாஜகவுடன் இணைந்ததால் அதிமுகவிற்கான இயல்பான வாக்கை அதிமுக இழந்து உள்ளதாக கூறினார். அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் தமிழர் பண்பாட்டினை மீட்டெடுப்போம் என்று கூறும் அமித்ஷா ஏன் கீழடி அகழ்வாய்வு நடத்துவதை தடுக்கிறீர்கள் அவரவர் மதம் என்று வாழ்ந்து வருகிற தமிழ்கலாச்சாரத்தில் இப்போது அதை கெடுத்துவிட்டு அப்பறம் வந்து மீட்டெடுப்போம் என்று கூறுவது யார் எங்க அதை அடமானம் வைத்துவிட்டார்கள், உருப்படியா நாட்டிற்கு நல்லது செய்யுங்கள் என கூறினார்.