பாகுபலியாக மாறிய ஸ்டோய்னிஸ்.. பஞ்சாப்-க்கு அதிர்ச்சி கொடுக்குமா டெல்லி?

6 months ago 5
ARTICLE AD

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை குவித்துள்ளது பஞ்சாப் அணி. அந்த அணியின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக ஆடி 44 ரன்களை எடுத்துள்ளார். இதனால், 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்க உள்ளது டெல்லி.

பாகுபலியாக மாறிய ஸ்டோய்னிஸ்:

நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்கு நான்கு அணிகள் தகுதி பெற்றுவிட்டன. இருப்பினும், லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கப் போகும் அணிகள் எவை என்பது தற்போது வரை உறுதியாகவில்லை.

நேரடியாக இறுதிப்போட்டிக்கு நுழைய இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், முதல் இரண்டு இடங்களை பிடிக்க குஜராத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் இன்றைய லீக் போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன.

இதில், டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டூப்ளிசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி, முதலில் பேட்டிங் ஆடி வந்த பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் பிரியன்ஸ் ஆர்யா 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பஞ்சாப்-க்கு அதிர்ச்சி கொடுக்குமா டெல்லி?

ஆனால், அதன் பிறகு ஆட வந்த வீரர்கள் அதிரடியாக ஆடினார்கள். பிரப்சிம்ரன் சிங் 28 ரன்களுக்கும் ஜோஷ் இங்கிலிஸ் 32 ரன்களுக்கும்  ஆட்டம் இழந்தனர். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களுக்கு தன்னுடைய விக்கெட்டை பறி கொடுத்தார்.

ஆனால், அதன் பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். மார்கஸ் ஸ்டோய்னிஸ் மட்டும் நிலைத்து நின்று ஆடி, டெல்லி அணி பந்துவீச்சாளர்களை கதிகலங்க செய்தார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை எடுத்தது. இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த ஸ்டோய்னிஸ் 44 ரன்களை எடுத்திருந்தார்.

பஞ்சாப் அணி சார்பில் முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள். தன்னுடைய கடைசி போட்டியில் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்க உள்ளது டெல்லி.

இன்றைய போட்டியில் பஞ்சாப் வெற்றி பெற்றால் 19 புள்ளிகளுடன் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறக்கூடும். மறுமுனையில் டெல்லி அணி ஏற்கனவே பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. அதேநேரம், கடைசி இரண்டு லீக் போட்டிகளிலும், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற இரண்டு அணிகளை தொடரிலிருந்து வெளியேறிய அணிகள் வீழ்த்தியுள்ளன. அதேபாணியில் பஞ்சாப் அணிக்கு டெல்லி அதிர்ச்சி அளிக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Read Entire Article