பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின் முக்கிய பிரமுகர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை இந்திய அரசு முடக்கியுள்ளது. இந்தத் தடையில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அடங்குவர்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்:

ஜம்மு-காஷ்மீர் ஒன்றிய பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான பஹல்காமில், நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவமானது, மிகவும் கவலை அடையச் செய்தது.

மேலும், பயங்கரவாத அமைப்பை பாகிஸ்தான் அரசாங்கம் ஊக்குவிப்பதாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. இந்த தருணத்தில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்தது. மேலும் பாகிஸ்தான் குடிமக்கள் மற்றும் பெரும்பாலான அதிகாரிகளை இந்தியாவை விட்டு வெளியே செல்லுமாறு உத்தரவு பிறப்பித்து பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்தது.

இதற்கு தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு தொடர்பாக, தற்போது இந்தியாவில் தடை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதள கணக்குகளுக்கு தடை:

இந்நிலையில் இன்று இந்திய அரசாங்கம் பல உயர்மட்ட பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளைத் தடை செய்துள்ளது.

இந்தியாவில் தடை செய்யப்பட்டவர்களில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) தலைவர் மரியம் நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி ஆகியோர் அடங்குவர்.

மேலும், பல முக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் இந்தியாவில் தடுக்கப்பட்டுள்ளன. இவர்களில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் அப்ரிடி, முகமது அமீர், நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் அடங்குவர்.

பிரபல பாகிஸ்தானிய நடிகர்களான மஹிரா கான், ஹனியா ஆமிர் மற்றும் அலி ஜாபர் ஆகியோரின் கணக்குகளும் நேற்று மாலை இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் நேற்று தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பதட்டமான சூழலில் இருநாடுகளின் உறவு:

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல், அட்டாரி நில எல்லையை மூடுதல் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாத தொடர்புகளைக் காரணம் காட்டி அரசாங்க உறவுகளை குறைத்தல் உள்ளிட்ட பல தண்டனை நடவடிக்கைகளை இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக அறிவித்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் பாகிஸ்தான் நிறுத்தி வைத்தது மற்றும் இந்திய விமானங்களுக்கு அதன் வான்வெளியை மூடியது.

மேலும், வகுப்புவாத உணர்வுப்பூர்வமான பரப்புவதாக கூறப்படும், முக்கிய பாகிஸ்தானிய செய்தி நிறுவனங்களும் இதில் அடங்கும்.

இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், வெறுப்பு பேச்சுகள் மற்றும் வகுப்புவாத கருத்துகளை தடை செய்யும் வகையில் பாஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் சமூக வலைதள பக்கங்கள், இந்தியாவில் இந்திய அரசால் தடை செய்துள்ளது கூறப்படுவது கவனம் பெற்றுள்ளது.