அப்பாவி சுற்றுலாப் பயணிகளை பாகிஸ்தானில் இருந்து இயங்கும், தீவிரவாத கும்பல் கொடூரமான முறையில், சுட்டுக் கொலை செய்தனர். பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா தெரிவித்த போதும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்து வந்தது. மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளிலும், பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வந்தது.

அடங்காத பாகிஸ்தான்

இதனால் இந்தியா பயங்கரவாத முகாம்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தியது. அதன் பிறகு பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில், அத்துமீறலில் ஈடுபட்டு வந்தது. இந்தியா எல்லைப் பகுதிகளில் தற்காப்பு தாக்குதலை மட்டுமே நடத்தி வந்தது.

இந்தநிலையில் நேற்று மாலை, இந்தியாவின் பல்வேறு நகர் பகுதிகளில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வந்தது. தொடர்ந்து இந்திய ராணுவம் ட்ரோன்களை, வானில் தடுத்து அழித்தன. இந்தியா தரப்பில் எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை, என ராணுவம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இந்தியா பதில் தாக்குதல்

இதனைத் தொடர்ந்து இந்தியா தனது தாக்குதலை தொடங்கியிருக்கிறது. விமான மூலம் பாகிஸ்தான் எல்லைக்குள் செல்லாமல், இந்தியா எல்லையில் இருந்தவாறு ட்ரோன்கள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்களை வைத்து இந்தியா தாக்குதலை நடத்தி வருகிறது. அதேபோன்று கடல்படை மூலமாகவும், இந்தியா கராச்சி துறைமுகத்திலும் தாக்குதலை நடத்தி வருகிறது. கராச்சி துறைமுகம் தற்போது பற்றி எரிந்து வருகிறது. பாகிஸ்தான் தலை நகரத்தின் மீதும் இந்தியா தனது தாக்குதலை நடத்தி வருகிறது.

பாகிஸ்தானுக்கு உதவும் நேட்டோ நாடு

துருக்கி தொடர்ந்து காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிராகவே இருந்து வருகிறது. இந்தநிலையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி கருத்து தெரிவித்திருந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் ஏற்பட்ட போதே, பாகிஸ்தான் பகுதியில் துருக்கி போர் விமானங்கள் வந்து இறங்கின.

அந்தப் போர் விமானங்களில் ராணுவ தளவாடங்கள் பாகிஸ்தானுக்கு வழங்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதேபோன்று துருக்கி பாகிஸ்தானுக்கு கப்பல் ஒன்றை வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த துருக்கி தொடர்ந்து மௌனம் சாதித்தே வருகின்றன. இந்தநிலையில் இந்தியா பாகிஸ்தான் மீது தொடர்ந்து‌ பதில் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், துருக்கி பாகிஸ்தானுக்கு மேலும் உதவகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.