பழனி கோயில் பிரசாதம்: நவம்பர் 1 முதல் புதிய விலை! பக்தர்களே தெரிந்துகொள்ளுங்கள்..

2 days ago 2
ARTICLE AD

தமிழ்க்கடவுள் என கொண்டாடப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடு தான் திண்டுக்கல் மாவட்டம் பழனியாகும். தென்னிந்தியாவின் மிக முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றான இது மலைக்கோயிலாகும். தனக்கு ஞானப்பழம் கிடைக்காததால் கோபத்தில் முருகப்பெருமான் தன் ஆடை, அணிகலன்களை துறந்து ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வந்து அமர்ந்தார். இந்த கோயிலில் முருகன்  தண்டாயுதபாணி என்ற பெயரில் வீற்றிருக்கிறார். இக்கோயிலில் முருகன் சிலை நவபாஷணம் கொண்டு செயப்பட்டுள்ளது.

இந்த சிலை மீது பட்டு வரும் அபிஷேகப் பொருட்கள் பல நோய்களை குணமாக்கும் குணம் கொண்டதாக நம்பப்படுகிறது. பழனி முருகன் கோயில் தைப்பூசம், பங்குனி உத்திரம், சஷ்டி போன்ற விழாக்கள் வெகு சிறப்பாக நடைபெறும். பழனி மலையை நாம் படிக்கட்டுகள் வழியாகவோ, மின் இழுவை வண்டி, ரோப் கார் ஆகியவை மூலமும் மேல் ஏறலாம்.  பழனியில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தம் பிரபலமானது. இதற்கு இந்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலைக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். பக்தர்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் 6 வகையான பிரசாதங்கள் சுகாதாரமான முறையில் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பிரசாதங்கள் தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களின் விலைவாசி உயர்வின் காரணமாகவும், அனைத்து திருக்கோயில்களிலும் நடைமுறைப்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்ட பொதுவான திட்டத்தின் படியும், ஒரே விற்பனை விலையில் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு பிரசாதம் தயார் செய்து விற்பனை செய்யும் வகையில் 01.11.2026 ஆம் தேதி முதல் கீழ்க்காணும் விபரப்படி பிரசாத விற்பனை இத்திருக்கோயிலில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதிய விலைப்பட்டியல்

1) லட்டு - 1 (எடை 50 கிராம்) - விலை ரூ.20/-

2) அதிரசம் - 1 (எடை 50 கிராம்) - விலை ரூ.20/-

3) முறுக்கு - 1 (எடை 50 கிராம்) - விலை ரூ.25/-

4) தேன் தினைமாவு - எடை 50 கிராம் - விலை ரூ.15/-

5) சக்கரை பொங்கல் - எடை 150 கிராம் - விலை ரூ.20/-

6) புளியோதரை - எடை 150 கிராம் - விலை ரூ.20/- விற்பனை செய்யவுள்ளதாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Read Entire Article