பழங்குடியின இளைஞர் பரிமாற்றத் திட்டம் நிறைவு: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மழை!

1 month ago 6
ARTICLE AD

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் பழங்குடியின இளைஞர் பரிமாற்றத் திட்ட நிறைவு விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசும்,சான்றிதழும் வழங்கப்பட்டது.

பழங்குடியினர் இளைஞர் நல பரிமாற்றத் திட்டம்

மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையும், காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியும் இணைந்து ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிர உள்ளிட்ட 4 மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர்களுக்கு தமிழக இருளர் இன மக்களது கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் ஆகியனவற்றை பரிமாற்றிக் கொள்ளும் திட்டம் தொடக்க விழா பிப்.20 ஆம் தேதி தொடங்கி செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது. நிறைவு விழாவிற்கு கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமை வகித்தார்.

கல்லூரி செயலாளர் வி.பி.கிரிஷிகேஷன்,தமிழ்த்துறை தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன், ராஜீவ்காந்தி இளைஞர் மேம்பாட்டு மைய இயக்குநர் கோபிநாத்,மத்திய அரசின் இளைஞர் நலத்துறை துணை இயக்குநர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மை.பாரத் அமைப்பின் மாநில இயக்குநர் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க. ஆர்த்தி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் மற்றும் குழுக்களுக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் கேடயம் ஆகியனவற்றை வழங்கினார். நிறைவாக கல்லூரி பேராசிரியை தேன்மொழி பாலு நன்றி கூறினார். விழாவின் நிறைவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர்களது பாரம்பரிய நடனம் மற்றும் கலைநிகழ்ச்சிளும் நடைபெற்றன.

Read Entire Article