பள்ளியா? மரணக் குழியா? இடியும் நிலையில் உள்ள தண்ணீர் தொட்டியால் தஞ்சையில் பரபரப்பு!

4 days ago 2
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே பள்ளி வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் தங்கள் குழந்தைகளை வரும் ஜூன் 4ம் தேதி பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று பெற்றோர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், அழகியநாயகிபுரம் ஊராட்சி, கரிசவயல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 4 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். பள்ளி வளாகத்திலேயே அங்கன்வாடியும், ஊராட்சி நூலகமும் அமைந்துள்ளது. இங்கு தினசரி குழந்தைகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இந்த வளாகத்தில் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட சுமார் 1 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. ஆண்டுகள் பல கடந்த நிலையில் இந்தத் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி தற்போது மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. தொட்டியின் தூண்கள், சிமெண்ட் காரைகள் பெயர்ந்தும், தொட்டியில் இருந்து தண்ணீர் கசிந்தவாறும் உள்ளது.

இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபத்தான நிலையில் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கழிவறைக்கு அருகில் அமைந்துள்ள இந்த குடிநீர் தொட்டியில் தற்போது நீர் நிரப்பப்படாமல் அதனைச் சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் கழிவறைக்கு செல்ல முடியாமல், பழைய கழிவறையை மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், ஒரே கழிவறையை மட்டும் பயன்படுத்தும் நிலை அவலநிலை உள்ளது. இது மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுகாதார சீர்கேட்டை, ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

மேலும், சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் அபாயகரமான நிலையால் மக்கள் வெகுவாக அச்சத்தில் உள்ளனர். பள்ளி இயங்கும் நேரத்தில் இடிந்து விழுந்தால் உயிரிழப்புகளை தவிர்க்க முடியாது என்று பெற்றோர்கள்,  கிராம மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, ஊராட்சி கிராம சபைக் கூட்டத்திலும், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றியும், காவல் துறைக்கு புகார் அளித்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது இந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மேலும் பழுதாகிக் கொண்டே வருகிறது.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், பேராவூரணி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் என பல்வேறு உயர் அலுவலர்கள் சேதமடைந்த இந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியும், இதுவரை மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. அதனால் கட்டிடம் இடித்து அகற்றப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர் என்று கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, வரும் 4-ம் தேதி பள்ளி திறப்பின் போது, தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என இப்பகுதி பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். எனவே, இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி திறக்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் பெற்றோர்களின் இந்த அதிரடி முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பெற்றோர்கள் தரப்பில் கூறுகையில், பலமுறை கோரிக்கை விடுத்தும் இந்த பழுதான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடித்து அப்புறப்படுத்தப்படவில்லை. பள்ளி விடுமுறை காலத்திலேயே இதை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தி இருக்கலாம். மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும், எதுவும் நடக்கலாம் என்பதால் பள்ளி திறந்தாலும் எங்கள் குழந்தைகளை அனுப்பக்கூடாது என்ற முடிவில் உள்ளோம் என்றனர். மாவட்ட நிர்வாகம் இது குறித்து எடுக்க உள்ள நடவடிக்கை என்னவோ?

Read Entire Article