பறவைகளின் சொர்க்கமாகும் மரக்காணம்: ரூ.50 கோடியில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு மையம்!

1 month ago 2
ARTICLE AD

விழுப்புரம்: மரக்காணத்தில் ரூ.50.30 கோடியில் சர்வதேச பறவைகள் மையம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

மரக்காணத்தில் பறவைகள் சரணாலயம்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த அகரம் காப்புக்காடு மற்றும் கழுவெளி பறவைகள் சரணாலயப் பகுதியில், உலகத்தரம் வாய்ந்த சர்வதேச பறவைகள் மையம் (International Bird Centre) அமைப்பதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் துவக்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சர் அவர்கள் நேற்று (04.03.2026) காணொளி காட்சி வாயிலாக இந்த மையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார். அதனைத் தொடர்ந்து இன்று, செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் முன்னிலையில் இதற்கான கட்டுமானப் பணிகள் முறைப்படி தொடங்கப்பட்டன.

தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் (TN-SHORE) திட்டத்தின் கீழ், உலக வங்கியின் நிதி உதவியுடன் ரூ.50.30 கோடி மதிப்பீட்டில் இம்மையம் அமையவுள்ளது.

இத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் அமையவுள்ள முதல் பன்னாட்டு பறவைகள் மையம் இதுவாகும். இத்திட்டம் இரண்டு முக்கியப் பிரிவுகளாகச் செயல்படுத்தப்படுகிறது:

அகரம் காப்புக்காடு பகுதியில் அதிநவீன ஆராய்ச்சி கூடங்கள், செயல் விளக்க மையங்கள், பயிற்சி வசதிகள், இயற்கை நடைப்பாதைகள் மற்றும் கழுவெளி ஈரநில மாதிரி அமைப்பு ஆகியவை உருவாக்கப்படவுள்ளன. கழுவெளி பகுதியில் 5,151 ஹெக்டர் பரப்பளவு கொண்ட, தென்னிந்தியாவின் இரண்டாவது பெரிய உவர்நீர் ஏரியான இங்கு, ராம்சார் தரச்சான்றுக்கு இணங்கப் பறவைகள் கண்காணிப்பு கோபுரம் மற்றும் ஈரநில நடைப்பாதைகள் (Boardwalk) அமைக்கப்படவுள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் , "தமிழக முதலமைச்சர் அவர்களின் முயற்சியால் வனப்பரப்பு அதிகரிக்கப்பட்டு, வன உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மத்திய ஆசியப் பாதையில் புலம்பெயர்ந்து வரும் லட்சக்கணக்கான பறவைகளுக்கு இந்த ஏரி முக்கிய வாழ்விடமாகும். இத்திட்டத்தின் மூலம் சூழல் சுற்றுலா மேம்படுவதோடு, உள்ளூர் மக்களுக்குப் புதிய வாழ்வாதார வாய்ப்புகள் உருவாகும்," என்று தெரிவித்தார்.

இந்த மையம் அமைவதன் மூலம், சர்வதேச அளவில் பறவைகள் பாதுகாப்பிற்கான ஒரு முக்கியப் புள்ளியாகத் தமிழகம் உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், தலைமை வன பாதுகாவலர் பெரியசாமி, இ.வ.ப., முதன்மை திட்ட இயக்குநர் .தீபக் பில்கி, இ.வ.ப., மாவட்ட வன அலுவலர்  பிர்ன்ஸ் குமார், இ.வ.ப., திண்டிவனம் சார் ஆட்சியர் அ.ல.ஆகாஷ், இ.ஆ.ப., மரக்காணம் ஒன்றியக்குழு தலைவர் ததயாளன், ஒன்றியக்குழு துணை தலைவர் .பழனி உட்பட பலர் கலந்துகொண்டனர்

Read Entire Article