பரீட்சைக்கு படிக்காம செல்போன் பார்க்கிற... திட்டிய பெற்றோர்... மாணவி எடுத்த விபரீத முடிவு

1 year ago 7
ARTICLE AD

திண்டுக்கல்: பரீட்சைக்கு படிக்காமல் செல்போனை பார்த்துக் கொண்டே இருக்கிறாயா... என்று பெற்றோர் திட்டியதால் பதினொன்றாம் வகுப்பு மாணவி தூக்கு மாட்டி தற்கொலை முயற்சி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஒரு தம்பதிக்கு மகளும் ஒரு மகனும் உள்ளனர். மகள் அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்த நிலையில், மாணவி செல்போனை பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். இதனைக் கண்ட அவரது தாயும் தந்தையும் நாளை பரீட்சை உள்ளது அதனால் பரீட்சைக்கு படிக்காமல் செல்போனை பார்த்துக் கொண்டே இருந்தால் எப்படி பரீட்சை எழுத முடியும் என்று கடுமையாக திட்டி உள்ளனர்.

Watch Video : நீங்க பயன்படுத்தும் தேயிலையில் கலப்படம் இருக்கா? சுத்தமானதா? இதோ வீடியோ விளக்கம்..

இதனால் மனம் வெறுத்த மாணவி வீட்டுக்குள் சென்று தனது துப்பட்டாவால் தூக்கு மாட்டிக் கொண்டார். உடனடியாக அவரை மீட்ட பெற்றோர் செவ்வாய்க்கிழமை (இன்று)  காலை 9.30 மணி அளவில் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

Atishi Singh: டெல்லி புதிய முதல்வராக அதிஷி தேர்வு; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். வேடசந்தூரில் 108 ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் உறவினர்கள் தவித்தனர். இதேபோல் ஞாயிற்றுக்கிழமை இரவு விபத்தில் படுகாயம் அடைந்த விட்டல் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த நூற்பாலை தொழிலாளி காளிமுத்து விபத்து ஏற்பட்டும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வேடசந்தூரில் ஆம்புலன்ஸ் இல்லாததால் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.

Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44

2464 0050, +91 44 2464 0060)

Read Entire Article