பராசக்தி படத்திற்கு சிவகார்த்திகேயன் கடைபிடிக்கும் ஸ்பெஷல் டயட்..ரகசியத்தை சொல்லிட்டார்

3 months ago 4
ARTICLE AD

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக சுதா கொங்காரா இயக்கத்தில் அவர் நடிக்கும் பராசக்தி படத்தை ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கல். பராசக்தி படத்திற்காக உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி எடையை குறைத்துள்ளார் சிவகார்த்திகேயன். தனது டயட் பற்றி சமீபத்தில் சிவகார்த்திகேயன் பகிர்ந்துகொண்டார்.

பொங்கலுக்கு ரெடியாகும் பராசக்தி

அமரன் , மதராஸி படத்தைத் தொடர்ந்து அடுத்தபடியாக பரபரப்பாக உருவாகி வருகிறது பராசக்தி திரைப்படம். டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்காரா இயக்குகிறார். அதர்வா , ரவி மோகன் , ஶ்ரீலீலா ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து பீரியட் திரைப்படமாக உருவாகி வருகிறது பராசக்தி. 2026 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு திரையரங்கில் வெளியாக இருக்கிறது. மதுரை , பொள்ளாச்சி , இலங்கை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.

பராசக்தி படத்தில் முன்னதாக சூர்யா நடிக்க இருந்தார். அப்போது இப்படத்திற்கு புறநானூறு என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. துல்கர் சல்மான் , நஸ்ரியா நஸிம் , விஜய் வர்மா ஆகியோர் படத்தில் நடிப்பதாக படக்குழு அறிவிப்பு வீடியோ வெளியிட்டது. பின் சூர்யா மற்றும் பிற நடிகர்கள் படத்தில் இருந்து விலகியதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு கதை கைமாறி பராசக்தி என டைட்டில் வைக்கப்பட்டது.

சிவகார்த்திகேயன் கடைபிடிக்கும் டயட்

அமரன் படத்திற்காக சிவகார்த்திகேயன் தனது எடையை 72 முதல் 80 கிலோவரை  குறைத்து ஏற்றியிருந்தார். அதேபோல் தற்போது மதராஸி படத்திற்காக தீவிரமான உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகிறார் சிவகார்த்திகேயன். இதுகுறித்து சமீபத்தில் பேசியபோது தனது டயட் பற்றி பகிர்ந்துகொண்டார். " அமரன் மற்றும் மதராஸி படங்களுக்கு நான் என் உடலை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டிய தேவை இருந்தது. அதனால் நான் ஜிம் சென்று பயிற்சி செய்தேன். ஆனால் பராசக்தி படத்தில் நான் 1960 களில் வாழ்ந்த ஒரு கதாபாத்திரமாக நடிக்கிறேன். இதனால் நான் நிறைய எடையை குறைக்க வேண்டியதாக இருந்தது. தற்போது நான் காய்கள் , பழங்கள் மற்றும் சூப் மட்டுமே சாப்பிடுகிறேன். எனக்கு இனிப்பு சாப்பிட எவ்வளவு பிடிக்கும் என்று உங்களுக்கு தெரியும் ஆனால் கடந்த சில மாதங்களாக நான் ரொம்பவும் கட்டுப்பாடாக இருந்து வருகிறேன். " என சிவகார்த்திகேயன் தெரிவித்தார்

மதராஸி வசூல்

மதராஸி திரைப்படத்திற்கு முதல் வாரத்திற்கு மிக சிறப்பான வரவேற்பு கிடைத்தது. முதல் நாளில் மதராஸி தமிழ் நாட்டில் ரூ 12.8 கோடி வசூலித்தது. இரண்டு நாட்களில் உலகளவில் ரூ 50 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டது. இரண்டாவது வாரத்தில் இருந்து படத்தின் வசூல் நாளுக்கு நாள் சரியத் தொடங்கியது. தற்போது வரை 7 நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ 77.25 கோடியும் , இந்தியளவில் 49.02 கோடியும் வசூலித்துள்ளது. வசூல் ரீதியாக மதராஸி சிவகார்த்திகேயனுக்கு தோல்வி படமாகவே அமைந்துள்ளது.

Read Entire Article