பயணிகள் நெரிசலை சமாளிக்கும் வகையில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களின் சேவை காலத்தை தெற்கு ரயில்வே மேலும் நீட்டித்துள்ளது. இந்த ரயில்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நேரம், நிறுத்தங்கள் மற்றும் வழித்தடங்களுடன் தொடர்ந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட சேவையின்படி:

06030 திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜூலை 5 முதல் ஜூலை 26 வரை 4 பயணங்கள் இயக்கப்படும்.

06029 மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் திங்கட்கிழமைகளில் ஜூலை 6 முதல் ஜூலை 27 வரை 4 பயணங்கள் இயக்கப்படும்.

06166 திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜூலை 5 முதல் ஜூலை 26 வரை 4 பயணங்கள் இயக்கப்படும்.

06165 தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் திங்கட்கிழமைகளில் ஜூலை 6 முதல் ஜூலை 27 வரை 4 பயணங்கள் இயக்கப்படும்.

06018 தூத்துக்குடி – தாம்பரம் சிறப்பு ரயில் திங்கட்கிழமைகளில் ஜூலை 6 முதல் ஜூலை 27 வரை 4 பயணங்கள் இயக்கப்படும்.

06017 தாம்பரம் – தூத்துக்குடி சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமைகளில் ஜூலை 7 முதல் ஜூலை 28 வரை 4 பயணங்கள் இயக்கப்படும்.

06045 சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமைகளில் ஜூலை 10 முதல் ஜூலை 31 வரை 4 பயணங்கள் இயக்கப்படும்.

06046 கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 2 வரை 4 பயணங்கள் இயக்கப்படும்.

மேலும், 06045/06046 சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயிலின் பெட்டிகள் அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த ரயிலில் 3 ஏசி 3-அடுக்கு (3AC) பெட்டிகள், 11 ஸ்லீப்பர் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் 2 லக்கேஜ்-கம்-பிரேக் வேன்கள் இணைக்கப்படும்.

06030/06029, 06166/06165, 06018/06017 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது. 06045/06046 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஜூலை 4 காலை 8.00 மணி முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.