இந்தியாவில் கார் விற்பனை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஹுண்டாய், டாடா ஆகிய நிறுவனங்கள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் நிலையில், மற்ற நிறுவனங்களும் ஆதிக்கத்தைச் செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Citroen நிறுவனத்தின் புதிய கார்கள்:

அந்த வரிசையில் இந்திய சந்தையில் தங்களுக்கென தனி இடம் பிடிக்க ஆர்வம் காட்டி வரும், Citroen நிறுவனம் இந்திய சந்தையில் அடுத்தடுத்து புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. அவர்கள் இந்திய சந்தையில் அடுத்தடுத்து அறிமுகப்படுத்த உள்ள கார்கள் என்னென்ன? என்பது குறித்து கீழே காணலாம்.

என்னென்ன கார்கள்?

இந்தியாவில் எஸ்யூவி கார்கள் விற்பனை படுஜோராக நடந்து வந்தாலும் மறுமுனையில் ஹேட்ச்பேக் கார்களின் விற்பனையும் அருமையாக நடந்து வருகிறது. இதையடுத்து, Citroen நிறுவனம் விரைவில் புதிய ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும், சி செக்மெண்டில் SUV கார் ஒன்றையும், டி செக்மெண்டில் MPV காரையும் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த கார்களுக்கான பெயர்களோ, சிறப்பம்சங்களோ மற்றும் விலை குறித்த தகவலோ இதுவரை சிட்ரோன் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இவர்கள் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள மற்றும் இந்திய சந்தையில் அறிமுகமாகும் தேதி குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஹேட்ச்பேக் கார்:

ஹேட்ச்பேக் காரை சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தினால் அது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று நம்பிக்கையுடன் அவர்கள் உள்ளனர். குறிப்பாக, கிராமப்புறங்களிலும் நெருக்கடி மிகுந்த நகர்ப்புறங்களிலும் இந்த கார் மிகப்பெரிய வரவேற்பை வாடிக்கையாளர்களிடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்யூவி, எம்பிவி கார்:

எம்ஜி கோமட் இவி, டாடா டியாகா இவி கார்களுக்கு இந்த கார் சந்தையில் மிகப்பெரிய போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த கார் மின்சார காராக அறிமுகப்படுத்தவும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. சிட்ரோன் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள எஸ்யூவி கார் அவர்களின் Aircross மற்றும் Basalt கார் தோற்றத்தில் இருக்கும் என்று கருதப்படுகிறது.

சிட்ரோன் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள MPV கார் தோற்றத்தில் மிகவும் சொகுசாக வடிவமைக்கப்படுகிறது. இந்த காரின் இருக்கைகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. பெட்ரோல், டீசல், ஹைப்ரிட் அல்லது மின்சார காராக இந்த கார் அறிமுகமாகப்போகிறதா? என்ற தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.

இந்த கார்களின் தயாரிப்பிற்காக சுமார் 4 ஆயிரம் கோடியை அடுத்த 3 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய சிட்ரோன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.