‘பதவியை ராஜினாமா செய்யத் தயார்..’ காங்கிரஸ் அமைச்சர் பேச்சால் தமிழக அரசியலில் பரபரப்பு

4 months ago 10
ARTICLE AD

மேகதாது விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் நலன் கருதி தேவைப்பட்டால் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன் என்று தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ்குமார் திருவள்ளூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும், தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்வேன் என்றும், பூண்டி கூடியம், பழவேற்காடு படகு குழாம், பறவைகள்  சரணாலயம் உள்ளிட்டவைகள் மீது உரிய கவனம் செலுத்தி சுற்றுலா பயணிகள் வரத்தை அதிகரிக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மற்ற மாநிலங்களை விட சிறந்த சுற்றுலா வரக்கூடிய மாநிலமாக தமிழகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Also Read| சட்டப்பேரவையில் தேசிய கீதம்.. டம்மி CMக்கு வெக்கமே இல்லையா? - விஜயை சாடிய திமுக ஐடி விங்!

மேலும், மேகதாது விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் நலனுக்கு பதவியை துறக்க கூட தயாராக இருப்பதாகவும் ஒரு பிடி மண்ணை கூட கர்நாடகா அரசை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் உணர்ச்சி பொங்க தெரிவித்தார். இதற்காக எந்த நிலைக்கு செல்வோம் என்றும் தேவைப்பட்டால் பதவியை கூட துறப்போம் ராஜினாமா செய்திட தயாராக உள்ளேன் என்றும் கூறினார்.

Read Entire Article