பதனீர் இறக்க அனுமதி...வாழ்வாதாரம் காக்கப்பட்டதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி

4 weeks ago 4
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் துலுக்கம்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் தாங்கள் பதனீர் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி.யை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து பதனீர் இறக்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் அருகே அமைந்துள்ளது இனாத்துக்கான்பட்டி ஊராட்சியை சேர்ந்தது துலுக்கம்பட்டி கிராமம். இங்கு சுமார் 550க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பதனீர் இறக்கும் தொழில் செய்து வந்தனர். இடைப்பட்ட காலத்தில் பதனீர் இறக்காமல் கள் இறக்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பதனீர் இறக்கும் தொழில் மேற்கொண்டு வந்த மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். விவசாயக் கூலித் தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதியாகும். இதற்கிடையில் தஞ்சாவூர் விமானப்படைத்தளம் அமைக்க இப்பகுதி மக்களின் விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்பட்டதால் வேறு தொழில் மேற்கொள்ள முடியாத நிலையில் வருமானத்திற்கு வழியின்றி மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் இனாத்துக்கான்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் சேகர் தலைமையில் பதனீர் இறக்கும் தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட எஸ்.பி., ராஜாராம் ஆகியோரை நேரில் சந்தித்து தங்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த வழியும் இல்லாமல் குடும்பம் நடத்த முடியாமல் தவித்து வருகிறோம். எங்களுக்கு பதனீர் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையை அடுத்து பதனீர் மட்டும்தான் இறக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து இனாத்துக்கான்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் சேகர் கூறுகையில், இப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்திற்கு வழி ஏற்படுத்தும் வகையில் பதனீர் இறக்க அனுமதி கிடைத்துள்ளது. எங்கள் கிராமங்களின் சார்பில் குழு அமைக்கப்பட்டு பதனீர் மட்டுமே இறக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளோம். மேலும் பதனீர் இறக்குவது குறித்தும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவோம். எவ்வித தவறும் ஏற்படாத வகையில் இப்பகுதி மக்கள் பதனீர் மட்டும் இறக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்ததிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனுமதி அளித்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாம் ஜூஸ் எனப்படும் பதநீர் பனை மரத்திலிருந்து கிடைக்கின்ற பானம். பனைகளின் பாளைகளைச் சீவி, நுனியில் வடியும் நீரை, சுண்ணாம்பு தடவிய மண் பானைகள் மூலம் சேகரிப்பார்கள். இனிப்புச் சுவையுடன் கூடிய இந்தத் திரவமே பதநீர். பதநீரிலிருந்து கிடைக்கும் ஏராளமான நற்பயன்கள் அளிக்கிறது.

உடல் மெலிந்தவர்களுக்கு சிறந்த ஊக்கம் தரும் பானம் இது. சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளை குணப்படுத்தும். வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வலி போன்றவற்றை குணமாக்கும். இதில் அடங்கியுள்ள சில வகை கூட்டுப்பொருட்கள் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் கொண்டவை. அவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து நல்ல ஆரோக்கியம் தரும். பதநீரிலுள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற கனிமச் சத்துக்கள் எலும்புகளுக்கு வலுவும் ஆரோக்கியமும் தருகின்றன.

வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் சருமத்திற்கு ஆரோக்கியமும் இயற்கையான பளபளப்பும் தருவதோடு, வயதான தோற்றம் வருவதையும் தடுக்கின்றன. இதிலுள்ள வைட்டமின் C நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. சுகவீனங்களை எதிர்த்துப் போராட இது உதவுகிறது. ஆன்டி ஆக்சிடன்ட்கள் ஃபிரி ரேடிக்கல்களால் உண்டாகும் செல் சிதைவைத் தடுக்கின்றன; நாள்பட்ட வியாதிகள் வராமல் உடலைப் பாதுகாக்கின்றன. இதிலுள்ள நார்ச்சத்துக்கள் செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுகின்றன; மலச்சிக்கலை நீக்குகின்றன.

Read Entire Article