பண முதலீடு பெயரில் கோடி ரூபாய் மோசடி... போலீஸ் காவலில் ஹரி நாடார்

1 month ago 5
ARTICLE AD

25 கோடி ரூபாய் கடன் தருவதாகக் கூறி கட்டுமான அதிபரை ஏமாற்றிய சத்திரிய சான்றோர் படை கட்சி நிறுவனர் ஹரி நாடார் மற்றும் அவரது கூட்டாளி ஆகிய இருவரை இரண்டு நாள் காவல்துறை விசாரணைக்கு  அனுமதி அளித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை நேரு நகரை சேர்ந்த சென்னிமலை என்பவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது நிறுவனத்தை மேம்படுத்த நினைத்த சென்னிமலைக்கு பணப்பற்றாக்குறை இருநததாக தெரிகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் சென்னிமலைக்கு அறிமுகமானார்.அவரிடம், சென்னிமலை 25 கோடி ரூபாய் கடன் கேட்டள்ளார். அதற்கு செந்தில்வாசன், பண முதலீட்டாளர்கள் தனக்கு தெரியும் என்றும் அதில் ஒருவரான கண்ணன் என்பவரை சென்னிமலைக்கு செந்தில்வாசன் அறிமுகம் செய்து வைத்தார்.  அப்போது , கண்ணன் உடபட 5 பேர் சேர்ந்து சென்னிமலையிடம் 25 கோடி ரூபாய் கடன் கிடைத்து விட்டதாக கூறி அதற்கான டி.டி வரைவோலையும் அவர் காண்பித்துள்ளார். இந்த தொகைக்கான கமிஷன் தொகை மற்றும் சில ஆவணங்கள் வழங்கிய பிறகு  25 கோடி ரூபாய் கடன் வழங்குவார்கள் என கண்ணன் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இதனை நம்பிய சென்னிமலை 67 லட்ச ரூபாயை வழங்கியுள்ளார். பெரிய தொகையை கடனாக வழங்கவுள்ளதால் பொள்ளாச்சி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி பொள்ளாச்சி பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அந்த மோசடி கும்பல் வராமல்  மீண்டும கோவை காந்திபுரம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்னி மலையை  வர கூறியவர்கள் அங்கும் அந்த மோசடி கும்பல் வரவில்லை என தெரிகிறது. பின்னர் தான், தாம் ஏமாற்றபட்டோம் என அறிந்த சென்னிமலை, இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில்  செந்தில்வாசன், முருகன், அன்புசெல்வன், கதிரேசன், அந்தோணி ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், செந்தில்வாசனை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் சென்னையில் நடந்த மோசடி வழக்கில் சத்திரிய சான்றோர் படை கட்சி நிறுவனர் ஹரி நாடாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கோவையை சேர்ந்த சென்னிமலை என்பவரிடம் முருகன் என்ற பெயரில் கடன் வாங்கி தருவதாக ரூ.67 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இந்த தகவல் கோவை பீளமேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அன் பேரில் சென்னை சென்ற ஹரி நாடார் இ, கதிரேசனை போலீசார் கைது செய்தனர். மேலும், வழக்கில் தலைமறைவாக உள்ள தென்காசியை சேர்ந்த அந்தோணி, அன்பு செல்வன் ஆகியோரை தேடி வருகின்றனர். இதற்கிடையே, ஹரி நாடார், கதிரேசன் ஆகியோரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பீளமேடு போலீசார் கோவை 2வது மாஜிஸ்திரேட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று நீதிபதி அப்துல் ரகுமான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2 பேருக்கும் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

Read Entire Article