பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?

1 week ago 3
ARTICLE AD

சிவகங்கை மாவட்டம் மேலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி சுள்ளான் மதன். இவர் மீது இரட்டை கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் பக்கத்து கிராமத்தில் மஞ்சு விரட்டி போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதனை காண சமீபத்தில் ஜாமீனில் இருந்து வெளியே வந்த ரவுடி சுள்ளான் மதன் வந்திருந்தார்.

சுள்ளான் மதன் கொலை

அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் சுள்ளான் மதனை சுத்துப்போட்டது. இதனை சற்றும் எதிர்பாராத அவர் உயிர் பயத்தில் அங்கிருந்து தப்பித்து ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சென்றது. பின்னர் கரும்பு தோட்டத்துக்குள் சென்ற அவரை விடாமல் கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த  சுள்ளான் மதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்தது.

போலீஸ் குவிப்பு

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுள்ளான் மதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் என மருத்துவமனை முன்பு குவிந்து உள்ளதால் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்விரோதம் காரணமா கொலை?

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது. பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article