படம் Flop ஆகிடுச்சு.. அந்த கூலியும் காலி.. இந்தக் கூலியும் காலி.. நாம் தமிழர் சீமான் காட்டம்

4 months ago 4
ARTICLE AD
<p>சென்னை ரிப்பன் மாளிகையில் கடந்த 13 நாட்களாக பணி நிரந்தரம் கோரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா உள்ளிட்ட பலரும் தூய்மைப் பணியாளர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 13ஆம் தேதி நடத்திய தூய்மைப் பணியாளர்களை போலீசார் நள்ளிரவில் கைது செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவர்களது போராட்டத்திற்கு தீர்வு காணாமல் திமுக அரசு நடத்திய வன்முறையை அரசியல் தலைவர்கள் வன்மையாகக் கண்டித்தனர்.&nbsp;</p> <p>இதனைத்தொடர்ந்து கடந்த 14ஆம் தேதி முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தூய்மைப் பணியாளர்களுக்கு காலை இலவச உணவு, இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட சலுகைகளை அறிவித்தார். இதனைத்தொடர்ந்து சுதந்திர தினமான நேற்று அமைச்சர் சேகர் பாபு தூய்மைப் பணியாளர்களுக்கு சமபந்தி வழங்கிய செய்திகள் வெளியானது. முதல்வருக்கு தூய்மைப் பணியாளர்கள் நன்றி தெரிவிப்பது போன்ற வீடியோக்களும் வெளியானது. &nbsp;இது பெரும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.&nbsp;</p> <p>இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசுகையில், "தமிழக அரசின் 10 அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து பேரணி நடத்தியவர்கள் உண்மையில் தூய்மை பணியாளர்களா எனப் பார்க்க வேண்டும். தன்மானமிக்க யாராவது இந்த அரசுடன் துணை நிற்பார்களா? தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி சம்பளம் கொடுத்தால் மாதத்திற்கு ரூபாய் 70 கோடிகளில் இருந்து 80 கோடிகள் தான் செலவாகும். ஆனால், தனியாருக்கு மாதம் ரூபாய் 230 கோடிகள் டெண்டருக்கு விட என்ன காரணம்? தூய்மைப் பணியாளர்களை தனியாருக்கு வேலை செய்ய சொல்லிவிட்டு, இப்போது அவர்களுக்கு காலை உணவு அளிப்பதாக கூறி உள்ளீர்கள்? அது யாருடைய பணத்தில் போடுவீர்கள்?</p> <p>பணி நிரந்தரம் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நீங்கள், நான்கரை ஆண்டுகளாகியும் அதனை நிறைவேற்றவில்லை. &nbsp;எல்லாவற்றையும் அரசு செய்ய முடியாது, அரசை விட தனியார் தான் செய்ய முடியும் எனக் கூறுவது என்பதற்கு தமிழ்நாடு அரசும் மாநகராட்சியும் எதற்கு. &nbsp;இதற்கெல்லாம் மேயர் ப்ரியா தான் டைரக்சன். அவவருக்கு சரியாக அது வரவில்லை. அதனை மேற்பார்வையிட்ட சேகர்பாபுவும் அந்த வேலையை சரியாக செய்யவில்லை. மேயர் பிரியா யாரிடத்திலும் உதவி இயக்குநராக பணி புரியாததால், படம் பிளாப் ஆகிவிட்டது. அதனால் அந்த கூலியும் காலி இந்த கூலியும் காலி" என்று சீமான் கூறினார். அப்போது அங்கு இருந்தவர்கள் அனைவரும் கலகலவென்று சிரிக்க தொடங்கினர்.&nbsp;</p>
Read Entire Article