பேரூர் பட்டீசுவரர் கோவில் இல் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. கோவை அருகே உள்ள பேரூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான மற்றும் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக பட்டீசுவரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா மிகவும் சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று காலை நடைபெறும் சிறப்பு பூஜைகளுடன் தொடங்குகிறது. நந்தி சின்னம் பொறிக்கப்பட்ட திருக்கொடிக்கு வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து கோவில் கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டு திருவிழா தொடக்க விழா நடைபெறும்.

பட்டீசுவரர் கோவிலில் கொடி ஏற்றம்

கொடியேற்றத்திற்குப் பிறகு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும். மாலை நேரத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன. இரவு 8 மணியளவில் மலர் பல்லாக்கில் சுவாமி மற்றும் அம்மன் வீதி உலா வருவது நடைபெறும். திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பட்டீசுவரர் மற்றும் பச்சைநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும். மேலும் சுவாமியும் அம்மனும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

வரும் 27 ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகன சேவை நடைபெறும். 28 ஆம் தேதி சுவாமிக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். 29 ஆம் தேதி மாலை 4 மணிக்கு பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த தேரோட்டத்தை பல ஆதீனங்களின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ளனர். 31 ஆம் தேதி தெப்பத்திருவிழா நடைபெறும். ஏப்ரல் 1 ஆம் தேதி நடராஜர் அபிஷேகம் நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் சத்தியவதி தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.