"நெஞ்சுவலி என நாடகம்" உடற்கூறாய்வில் அம்பலமான ரகசியம் !! Ex - ரவுடி கொலையில் தவெக நிர்வாகி கைது

6 hours ago 3
ARTICLE AD

"இரட்டை கொலை வழக்கில் தொடர்பு"

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இறச்சகுளம் பகுதியில் உள்ள பூங்கா நகரைச் சேர்ந்தவர் 43 வயதுடைய சுரேஷ். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் , தேரூர் இரட்டைக் கொலை உள்ளிட்ட கொலை வழக்குகளிலும் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது.

மேலும், போலீசாரின் சரித்திரப் பதிவேட்டில் இடம் பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த (அக் 23) ம் தேதி சுரேஷ் வீட்டில் அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சுரேஷ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

சுரேஷுக்கு ஏற்கெனவே உடல் நலப் பாதிப்பு இருந்ததாகவும் , இரண்டு மாதங்களுக்கு முன்பு புத்தேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் அவரது மனைவி பாரதி ( வயது 37 ) போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் பூதப்பாண்டி போலீசார், BNSS சட்டத்தின் 194-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே சுரேஷின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

"உண்மையை ஒப்புக் கொண்ட மனைவி"

பிரேதப் பரிசோதனையின் போது சுரேஷின் கழுத்தில் காயம் இருந்தது தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மருத்துவர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அந்தக் காயம் எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து பாரதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் கணவர் உடல் நலக் குறைவால் உயிரிழந்ததாகக் கூறிய அவர், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கணவரின் கழுத்தை நெரித்ததாக ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி , சுரேஷ் குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியைத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், செல்போனில் பல்வேறு வீடியோக்களைப் பார்த்து விட்டு மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

"கணவர் கழுத்தை நெறித்து கொலை"

சம்பவத்தன்றும் இதே போல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆத்திரமடைந்த பாரதி கயிற்றால் கணவரின் கழுத்தை நெரித்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கொலை வழக்காக மாற்றிய போலீசார் பாரதியைக் கைது செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் பாரதிக்கு மட்டுமே தொடர்பு உள்ளதா அல்லது வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சுரேஷ் பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அவரது மனைவி பாரதி தமிழக வெற்றிக் கழகத்தின் குமரி கிழக்கு மாவட்ட மகளிரணி இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Entire Article