நூறு சாமி படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு..நன்றி கூறி வீடியோ வெளியிட்ட சுவாசிகா

4 months ago 9
ARTICLE AD

இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி சுவாசிகா நடித்த நூறு சாமி திரைப்படம் கடந்த ஜூன் 19 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இளம் வயதில் கணவனை இழந்த பெண்ணிற்கு அவரது இரு மகன்கள் இணைந்து திருமணம் செய்துவைத்த நிஜக் கதையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. லப்பர் பந்து , மாமன் ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகை சுவாசிகாவின் நடிப்பு இப்படத்தில் பெரியளவில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. நூறு சாமி படத்தில் தனக்கு மக்கள் கொடுத்த வரவேற்பிற்காக நன்றி தெரிவித்து நடிகை சுவாசிகா கண்ணீர் சிந்தியபடி வீடியோ வெளியிட்டுள்ளார் .

நன்றி தெரிவித்து சுவாசிகா வீடியோ

சுவாசிகா வெளியிட்ட வீடியோவில் "எல்லா தமிழ் மக்களுக்கும் என்னுடைய பெரிய நன்றி. நன்றியைத் தவிர எனக்கு வேற என்ன சொல்ல வரவில்லை. என்மேல் நீங்கள் அவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்கள். லப்பர் பந்து படமாகட்டும் , மாமன் படமாகட்டும் தற்போது நூறு சாமி படமாகட்டும் ஒவ்வொரு படத்திற்கும் எனக்கு அவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்திருக்கிறீர்கள். என்னை நம்பி எப்படி நீங்கள் இந்த படத்தை பார்க்க வந்தீர்கள். எப்படி சசி சார் எனக்கு இந்த கதாபாத்திரம் கொடுத்தார். எப்படி விஜய் ஆண்டனி அதை ஏற்றுக்கொண்டார் என்று என்னால் நம்பமுடியவில்லை. எல்லாமே ஒரு கனவு மாதிரி இருக்கும். நான் ஹீரோயினாக நடிக்கக் கூடிய ஒரு படம் இத்தனை திரையரங்குகளில் ஓடுவதையும் இத்தனை மக்கள் அதை ரசித்து பார்ப்பதை ஒரு நாள் கூட நான் கனவு காணாமல் தூங்கியது கிடையாது. இன்று அதெல்லாம் நிஜமாகியிருக்கிறது. தமிழ் ரசிகர்கள் நீங்கள் எவ்வளவு பெரிய ஆதரவு கொடுக்கிறீகள். நன்றியைத் தவிர வேற ஒரு வார்த்தை இருக்கா என்று எனக்கு தெரியாது. என்னுடைய ஆக்சிஜனே தமிழ் ரசிகர்கள் தான். நீங்கள் கொடுக்கும் இந்த அன்பிற்கு எப்போதும் நான் கடமைபட்டிருப்பேன். பொறுப்பாக இருக்க முயற்சி செய்வேன். நல்ல கதைகளாக தேர்வு செய்து நடிப்பேன். இந்த படத்திற்கு நான் தான் ஹீரோ என்று நிறைய பேர் எனக்கு கால் செய்கிறார்கள். நூறு சாமி என்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான படம் . என்னை மாதிரி கலைஞர்களுக்க்கு தொடர்ச்சியாக ஆதரவு கொடுங்கள்.  நான் நிச்சயமாக உங்களை ஏமாற்றமாட்டேன். நல்ல கதைகளை தேர்வு செய்து கடினமாக உழைப்பேன்" என சுவாசிகா தான் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளார். " என்று கூறியுள்ளார்.

Read Entire Article