நூடுல்ஸ் சாப்பிட்டதால் 5 பேர் உயிரிழப்பு.. திட்டமிட்ட தற்கொலையா? .. உ.பி.யை அதிர வைத்த சம்பவம்!
1 week ago 3
ARTICLE AD
உத்தரப்பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நூடுல்ஸ் சாப்பிட்டதால் உயிரிழந்ததாக தகவல் வெளியான சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.
மர்மமான முறையில் 5 பேர் உயிரிழப்பு
உத்தரப்பிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ல ரபுபுரா பகுதியில் மகேஷ் என்பவர் தனது மனைவி லதா மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இதனிடையே அக்டோபர் 17ம் தேதியான நேற்று
காலை மர்மமான முறையில் வீட்டில் உள்ள அறைகளில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதுதொடர்பாக உள்ளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.
தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகம்
ஆனால் திடீர் திருப்பமாக 5 பேர் தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில், “உயிரிழந்த மகேஷின் செல்போனை ஆய்வு செய்ததில் இந்த மரணங்களுக்கு எல்லாம் தன் இரண்டு சகோதரிகளும், மைத்துனரும் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். குடும்பச் சொத்துப் பிரிவினை தொடர்பாக நீண்ட காலமாக அவர்களுக்குள் தகராறு இருந்து வந்துள்ளது. இது குடும்ப உறவிலும் விரிசலை உண்டாக்கியுள்ளது.
மகேஷின் அண்ணியான நீரஜ் என்பவர் அளித்த தகவலில், தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு தான் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும், குடும்பம் மீண்டும் ஒன்றாக இணைந்து வாழும் என்று மகேஷ் தனக்கு உறுதியளித்ததாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் அது நடக்காத விரக்தியில் மகேஷ் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் சம்பவம் நடந்த வீட்டை நாங்கள் ஆய்வு செய்தோம். அங்கு உணவு விஷமாக மாறியதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல், உணவில் விஷம் கலந்திருக்கலாம் என்பதற்கான சந்தேகம் எழுந்துள்ளது.
மகேஷ் வீட்டில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், கண்டெடுக்கப்பட்ட உணவு மற்றும் அதில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் எதுவும் காலாவதியாகவில்லை என தெரிய வந்தது. உணவு நஞ்சாக மாறும்போது உடலில் ஏற்படும் பாதிப்புகள் போன்ற தகவல்களும் வெளிவரவில்லை. அதனாலேயே இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அதனடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மகேஷின் ஒரு சகோதரிகள் மற்றும் மைத்துனர் ஆகியோர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article