உத்தரபிரதேச மாநிலத்தில் காதலனை தனிமையில் சந்தித்த காதலி குடும்பத்தினருக்கு பயந்து செய்த சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும், இளைஞனும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி யாருக்கும் தெரியாமல் சந்தித்து தனிமையில் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இப்படியான நிலையில் ஜனவரி 23ம் தேதி வெள்ளிக்கிழமை காலையில் அந்த பெண்ணின் குடும்பத்தினர் ஒரு வேலை விஷயமாக வெளியே சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வர வெகு நேரமாகும் என்பதை உணர்ந்த அப்பெண் சற்றும் தாமதிக்காமல் தனது காதலனுக்கு போன் செய்து என் வீட்டில் யாரும் இல்லை. உடனடியாக கிளம்பி வா என கூறியுள்ளார்.

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற எண்ணத்தில் அந்த இளைஞனும் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து விட்டார். இருவரும் கதவு, ஜன்னல்கள் என அனைத்தையும் அடைத்து விட்டு தனிமையில் இனிமை காண முடிவு செய்துள்ளனர். இப்படியான நிலையில் பக்கத்து வீட்டுக்காரரான இளம் பெண்ணின் அத்தைக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதாவது வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்று விட்டனர், இளம்பெண் மட்டுமே தனியாக உள்ளார். இப்படியான நிலையில் அந்த வீட்டில் ஏன் விசித்திரமான சத்தங்கள் கேட்கிறது என குழம்பிய அப்பெண்ணின் அத்தை, ஒருவேளை திருடர்கள் யாரும் வந்திருப்பார்களோ என நினைத்து ஒரே நேரத்தில் காவல்துறைக்கும் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

இரு தரப்பும் வருவதற்குள் உண்மையில் வீட்டுக்குள் நடப்பது என்ன என்பதை அறிய கதவை தட்டியுள்ளார். ஜாலியாக தனிமையில் இருந்த அந்த காதல் ஜோடி கதவு தட்டப்படுவதை கண்டு ஷாக்காகினர். என்றாலும் அந்த பெண் எந்தவித பயமில்லாமலும் கதவை திறந்து என்னவென்று விசாரித்துள்ளார். வீட்டில் யார் இருக்கிறார்கள், ஏன் வித்தியாசமான சத்தங்கள் கேட்கிறது என அத்தை கேட்க, அதெல்லாம் ஒன்றும் இல்லை என கூறி அந்த பெண் கதவை பூட்டிக்கொண்டார். அப்பெண் சொன்னதை அவளது அத்தையால் நம்ப முடியவில்லை.

இதனால் மேலும் சந்தேகமடைந்த அவர், அப்பெண்ணின் வீட்டு கதவை வெளியில் இருந்து பூட்டியுள்ளார். இதனிடையே அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கும் தகவல் சென்ற நிலையில், அவர்கள் வீடு திரும்பினர். ஒரு பக்கம் போலீசார், மறுபக்கம் உறவினர் என இரு தரப்பும் பூட்டை திறந்து எல்லா இடங்களிலும் தேடியுள்ளனர். சுமார் 45 நிமிடங்கள் கடந்த நிலையில் அப்பெண்ணின் வீட்டில் யாரையும் கண்டறிய முடியவில்லை.

ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்த உறவினர்கள் அங்கு பூட்டிய நிலையில் இருந்த ஒரு பெட்டியில் இருந்து சத்தம் வருவதை அறிந்தனர். அதன் சாவியை கேட்க அப்பெண் முதலில் தர மறுத்தார். அதில் உடைகள், தனிப்பட்ட பொருட்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். எனினும் போலீசார் சாவியைக் கேட்க, பயந்து போன அந்த பெண் கொடுத்தார். அந்த பெட்டியை திறந்தால் உள்ளே இருந்து ஒரு இளைஞன் வந்தான். அந்த நேரத்தில் சுயநினைவை இழந்து மூச்சு விடவே சிரமப்பட்ட நிலையில் அவன் காணப்பட்டான். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சிறுமியின் குடும்பத்தினர், அந்த இளைஞரை அடிக்க முயன்றனர். ஆனால் போலீசார் தலையிட்டு இருவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அந்த இளைஞர் மீது போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.