துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று தமிழ்நாடு அரசுக்குத்தான் உள்ளது என உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது.

அதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர்களே, நாளைய தலைவர்கள் நீங்கள்; நீங்களே யோசிச்சு பாருங்க, முதல்வர் ஆகி, திட்டங்களை நிறைவேற்றினால் ஆஃப்ட்ரால் ஒன்றிய அரசின் ஏஜென்ட்டாக நியமிக்கப்பட்டிருக்க கூடிய தற்காலிகமாக தங்கியிருக்க கூடிய ஆளுநர் ஒருவரால் தடுத்த நிறுத்த முடியும் என்றால், மக்கள் போடுகிற வாக்குக்கு என்ன மரியாதை; தேர்தல் எதுக்கு நடத்துனும். ஆளுநர் பதவி என்பது எந்த பதவி இல்லாத ரப்பர் ஸ்டாம்ப் போஸ்ட். மாணவர்களே, ஆசிரியர்களுக்கு சம்பளம் தருவது அரசு, வசதிகளை செய்து தருவது அரசு, ஆனால் உங்களை நிர்வகிக்கும் துணை வேந்தர்களை நியமிப்பது ஆளுநர் என்றால் என்ன நியாயம், அதனால்தான் நீதிமன்றம் சென்றோம். பல ஆண்டுகளாக இருந்த பிரச்னைக்கு உச்சநீதிமன்றம் முடிவு கட்டியுள்ளது. .