நீ என்ன பண்ணிருக்க...சீமான் தேவல..விஜயை வெளுத்து வாங்கிய பிரகாஷ் ராஜ்

4 hours ago 1
ARTICLE AD
<p>திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த என் பாண்டி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று பிரச்சாரம் மேற்கொண்டபோது தவெக தலைவர் நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்து பேசினார். விஜயுடன் கில்லி , சிவகாசி , வாரிசு தற்போது ஜனநாயகன் படத்தில் பிரகாஷ் ராஜ் இணைந்து நடித்துள்ளார் என்றபோதிலும் விஜயை நேரடியாக விமர்சித்து பேசுவது இதுவே முதல்முறை</p> <p>தமிழ்நாட்டிற்கு துரோகம் நடந்துகொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் இப்படி செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும் . இந்த மாடல் நமக்கு தேவையா ? திருப்பரங்குன்றத்தை முடித்துவிட்டு நேராக பழனிக்கு வருவார்கள். இவர்கள் மதுரையை இன்னொரு மனிப்பூராக மாற்றிவிடுவார்கள். இவர்களுக்கு இந்துக்கள் மேல் அன்பு கிடையாது . அவர்களின் மீது அதிகாரம் வேண்டும். இந்த தேர்தல் இவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நேரம்</p> <p>சினிமா மாடல் என்று ஒன்று இருக்கு. ஒரு சினிமாவில் நீ டாக்டர் ஆகிவிடலாம் , முதலமைச்சர் ஆகிவிடலாம். அதற்காக அரசியலிலும் நேரடியாக முதலமைச்சர் ஆகிவிடுவியா நீ. யார் அரசியல் பேச வேண்டும் . என் அளவுக்கு அரசியல் பேசிருக்கியா நீ. இத்தனை வருடத்தில் தமிழ்நாட்டிற்காகவோ , மொழிக்காகவோ தன்மான பிரச்சனை ஏற்பட்ட போது நீ நின்றிருக்கிறாயா. உங்கள் மேல் மக்கள் காட்டும் அன்பு உங்களுடைய திறமைக்காக. அரசியலுக்காக அல்ல. அதை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். நடிகர்களை பிடித்தால் விசில் அடிக்கலாம் நாட்டை கொடுக்க முடியாது. சினிமா வேறு அரசியல் வேறு. சீமான் பரவாயில்லையே கடந்த பத்து வருடங்களாக மக்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். திராவிட மாடல் வேண்டுமா. அடிமை மாடல் வேண்டுமா , அல்லது சினிமா மாடல் வேண்டுமா என்பதை முடிவு செய்யுங்கள்" என பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்&nbsp;</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/how-to-identify-original-saffron-256655" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article