மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்துக்கு நடுவே பாங்காங்க் மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் வெளியே அனுப்பப்பட்டனர்.

இதையடுத்து பெண் ஒருவர் தெருவில் குழைந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அழிவுக்கு மத்தியில் குழந்தை பிறந்தபோது எடுக்கப்பட்ட வியத்தகு காட்சிகள் ஆன்லைனில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மருத்துவமனையின் ஸ்ட்ரெச்சரில் அந்தப் பெண் பிரசவித்தார். வீடியோவில், மருத்துவமனை ஊழியர்கள் தாயைச் சூழ்ந்து நின்று அந்தப் பெண்ணுக்கு பிரசவத்தில் உதவுவதைக் காண முடிந்தது.

NEW VIDEO: Skyscraper under construction collapses as massive earthquake hits Bangkok. No word on casualties pic.twitter.com/QhoLEEnd7b

— BNO News (@BNONews) March 28, 2025

மிகப்பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு, கிங் சுலாலாங்கோர்ன் நினைவு மருத்துவமனை மற்றும் பிஎன்ஹெச் மருத்துவமனையைச் சேர்ந்த நோயாளிகள் அருகிலுள்ள பூங்காவிற்கு வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கட்டிடங்களுக்கு வெளியே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

மத்திய மியான்மரின் மண்டலே நகரை வெள்ளிக்கிழமை தாக்கிய நிலநடுக்கம் அண்டை நாடான தாய்லாந்திலும் பலத்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தியது.

மியான்மரின் பெரும்பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பாலங்கள் இடிந்து விழுந்தன. சாலைகள் விரிசல் அடைந்தன. இந்த பேரழிவு தாய்லாந்து வரை பரவியது. அங்கு பாங்காக்கில் கட்டுமானத்தில் இருந்த 30 மாடி வானளாவிய கட்டிடம் இடிந்து விழுந்து பலரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்துள்ளது.

Footage during the earthquake in #Bangkok a baby was born in the park 😭 Waht a story to tell ‘’ I was born during the earthquake ‘’ #แผ่นดินไหว #earthquake #myanmarearthquake #bangkokearthquake #ตึกถล่ม pic.twitter.com/7E0FdzfPEf

— Miia 🩵 (@i30199) March 28, 2025

2,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மிகப்பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பின்னதிர்வுகள் ஏற்பட்டன. அவற்றில் ஒன்று 6.4 ரிக்டர் அளவில் பதிவானதாகக் கூறப்படுகிறது

நிலநடுக்கம் காரணமாக தாய்லாந்தில் மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் 30 மாடி அரசு கட்டிடம் இடிந்து விழுந்தது உட்பட மூன்று கட்டுமான இடங்களில் சுமார் 10 பேர் இறந்ததாகவும், 16 பேர் காயமடைந்ததாகவும், 101 பேர் காணாமல் போனதாகவும் பாங்காக் துணை ஆளுநர் தவிதா கமோல்வேஜ் தெரிவித்ததாக பாங்காக் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.