பீகாரில் மூச்சுத் திணறல் காரணமாக ஒருவர் சுயநினைவை இழந்த நிலையில் அவருக்கு போக்குவரத்து காவலர் CPR சிகிச்சை மூலம் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது.

பீகார் தலைநகர் பாட்னாவில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள மிதாபூர் புறவழிச்சாலை அருகே இந்தச் சம்பவம் நடந்ததாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. அங்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதனால் அவர் சுயநினைவை இழந்து விட்டார். உடனடியாக அங்கிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர், அந்த நபரின் மார்பில் அழுத்தம் கொடுத்து அவரை மீண்டும் சுயநினைவுக்கு கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டார். அதன் அருகில் நின்ற மற்றொருவர் அந்த சிஎஸ்ஐஎஃப் வீரரின் பாதத்தை நன்றாக தேய்த்து விட சில நிமிடங்களில் அந்த நபர் சுயநினைவுக்கு வந்து எழுந்து நின்றார் என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவைப் பகிர்ந்த பீகார் காவல்துறை எப்போதும் உங்களுடன். ஒவ்வொரு நெருக்கடியிலும் உங்களுடன், ஒவ்வொரு சூழ்நிலையிலும் உங்களுக்காக அர்ப்பணிப்புடன். பீகார் காவல்துறைக்கு உங்கள் பாதுகாப்பே எங்களின் தலையாய முன்னுரிமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#BiharPolice सदैव आपके साथ
हर संकट में आपके साथ, हर परिस्थिति में आपके लिए समर्पित।
आपकी सुरक्षा, हमारी सर्वोच्च प्राथमिकता।

.#HainTaiyaarHum #janpolice #humanityfirst #bihar @BiharHomeDept @IPRDBihar pic.twitter.com/Oh1hWIVI70

— Bihar Police (@bihar_police) March 22, 2026

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பலரும் அந்த சிஐஎஸ்எஃப் வீரருக்கு உதவ முன்வந்த காவலருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த சம்பவத்தால் நம்முடைய பீகார் மாறக்கூடும் எனவும், சிபிஆர் செய்வதற்கான சரியான செய்முறை அனைத்து கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் எல்லா இடங்களிலும் கற்பிக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மேலும் இந்த நல்ல பணியை நாம் தொடர வேண்டும் எனவும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

சிபிஆர் சிகிச்சை என்றால் என்ன?

சிபிஆர் சிகிச்சை என்பது இதய நுரையீரல் புத்துயிரூட்டல் என்பது அர்த்தமாகும். சுயநினைவின்றி மரணத்தை நோக்கி நபரின் இதயத்தின் செயல்பாட்டையும் சுவாசத்தையும் மீட்டெடுக்கும் ஒரு அவசரகால செயல்முறையாகும். முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை இரத்த ஓட்டத்தை சீராக்கவும், செயற்கை சுவாசம் அளிக்கவும், உடலுக்கு ஆக்ஸிஜன் வழங்கவும் இந்த சிகிச்சை முறை உதவும்.

உங்கள் கைகளை பாதிக்கப்பட்ட நபரின் மார்பின் மீது வைத்தபடி அழுத்தவும். பெரியவர்களுக்கு நிமிடத்திற்கு 30 முறை செய்யலாம். அதன்பின் வாய் வழியே சுவாசம் செலுத்தி மூச்சை மீட்டெடுக்கலாம். குழந்தைகளுக்கு வாய்வழி சுவாசம் வழியாக இதனை முயற்சிக்கலாம்.