நாளை நடைபெறும் 'இரும்பின் தொன்மை' எனும் நூலை வெளியிட்டு விழாவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் 'இரும்பின் தொன்மை' எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிகழ்வு நாளை காலை 10 மணி அளவில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.