நாளை மின் தடை! தூத்துக்குடி, கோவை, தேனியில் மின் வினியோகம் பாதிப்பு: முக்கிய பகுதிகள் இதோ!

2 months ago 10
ARTICLE AD

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நாள்தோறும் சீரான மற்றும் தடையற்ற மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின் வினியோகத்தை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் உள்ள துணைமின் நிலையங்களில் குறிப்பிட்ட நாட்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. அப்பணிகளின்போது மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட சில இடங்களில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

அந்த வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் தேனி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில்  துணை மின் நிலையத்தில் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 5.2.2026, வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மடத்தூர், மடத்துர் மெயின் ரோடு, முருகேசநகர், கதிர்வேல்நகர், தேவகிநகர், சிப்காட் வளாகம், திரவியரத்தினநகர், அசோக்நகர், ஆசிரியர் காலனி, ராஜிவ்நகர், சின்னமணிநகர், 3வது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, EB காலனி, ஏழுமலையான்நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலை தொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால்நகர், பத்திநாதபுரம், சங்கர் காலனி, FCI குடோன் பகுதிகள், நிகிலேசன்நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாதநகர், சில்வர்புரம், சுப்புரமணியபுரம்,

கங்கா பரமேஸ்வரிகாலனி, லாசர்நகர், ராஜரத்தினநகர், பாலையாபுரம், வி.எம்.எஸ்.நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜிநகர், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதிநகர், பால்பாண்டி நகர், முத்து நகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், N.G.O. காலனி, அன்னைதெரசாநகர், பர்மா காலனி, TMB காலனி, அண்ணாநகர் 2 வது மற்றும் 3 வதுதெரு, கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதிநகர், புதூர்பாண்டியாபுரம் மெயின் ரோடு, கிருபைநகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம்நகர், கணேஷ்நகர், புஷ்பாநகர்,கல்லூரிநகர் ஸ்டெர்லைட் குடியிருப்புகள், எட்டையபுரம் ரோடு வடபகுதி, டிமார்ட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது  என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மின் தடை பகுதிகளாக செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர், சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்ரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர் போன்ற பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மின் தடை பகுதிகளான போடி நகர், குரங்கணி, மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

Read Entire Article