நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தரமான கல்வியை அளிக்கும்: சீமான் உறுதி

1 day ago 1
ARTICLE AD

தஞ்சாவூர்: தரமான கல்வியை கொடுப்பது அரசின் கடமை, நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், தரமான மருத்துவம், சாலை, குடிநீர் இதையெல்லாம் கொடுப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதி கூறினார்.

பட்டுக்கோட்டை தபால் நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பட்டுக்கோட்டை வேட்பாளர் கண்ணன், பேராவூரணி வேட்பாளர் புவனாவை ஆதரித்து பேசியதாவது:

நாட்டில் மற்ற பொருட்கள் எல்லாம் உற்பத்தி செய்பவர்களே விலையை நிர்ணயிக்கிறார்கள், அவர்கள் சொகுசாக வாழ்கிறார்கள். ஆனால் மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு அவர்களால் ஏன் விலையை நிர்ணயிக்க முடியவில்லை, அவர்கள் மட்டும் ஏன் கடனில் இறந்து போகிறான் என சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே, மாற்றம் அவசியம் வேண்டும்.

இதற்கு நாம் ஆட்சிக்கு வந்ததும்,  தீர்வு காண ஒரு குழுவை அமைத்து, விவசாயிகளின் பரிந்துரை விலையை அரசு நிர்ணயிக்கும். நாட்டில் தனியார் நிறுவனங்கள் கல்வியை தரமாக கொடுக்கும்போது, ஏன் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசால் கொடுக்க முடியவில்லை. இந்த மக்களுக்கு நீரும், சோறும் முக்கியம். அதற்கான பொருளாதார கட்டமைப்பை நாம் தமிழர் கட்சி அவசியம் கொண்டு வரும்.  இந்த ஆட்சியில் யார் முறைகேடு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்போதுதான் தவறுகள் ஏற்படாது.

தமிழர்களுக்கு என்று ஓர் வரலாறு உண்டு, ஆனால் திராவிடர்களுக்கு வரலாறு இல்லை. அவர்கள் திருடர்கள் தமிழர்களின் வரலாற்றை அவர்கள் திருடுகிறார்கள். எனவே தான் திருட்டு திராவிடம் என்கிறோம்.

ஒரு குடும்பத்தில் குடும்பத் தலைவன் கடன் வாங்கிவிட்டு செத்தால்,  கடன்காரன் மகன், மகள் என்று சொல்கிறோம். அதே நேரத்தில் நாட்டில் ரூ.10.50 லட்சம் கோடி கடனை வாங்கிவிட்டு சென்றவர்களை நாம் என்ன சொல்வது.இந்த கடனை வாங்க அவர்கள் யாரை அடமானம் வைத்துள்ளார்கள். தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்கு கரும்பு, வெல்லம், அரிசி என கேட்கிறோம், தமிழ் நாட்டில் கரும்பு, நெல் இல்லையா, ஆனால் இதையெல்லாம் குஜராத்திலிருந்து இங்கு கொண்டு வந்து நமக்கு கொடுக்கிறார்கள். காரணம் எல்லாமே கமிஷன் தான். இந்த நிலைமை நிச்சயம் மாற்றப்படும்.

தரமான கல்வியை கொடுப்பது அரசின் கடமை, நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், தரமான மருத்துவம், சாலை, குடிநீர் இதையெல்லாம் கொடுப்போம். உயர் கல்வியை, கடன் வாங்கி தான் கற்க வேண்டும் என்ற நிலையை இங்கு ஏற்படுத்தி உள்ளார்கள். சோலைவனமாக உள்ள தமிழ் நாட்டின் இளைஞர்கள் பாலைவன நாட்டுக்கு வேலை தேடி செல்கின்றனர். இங்கு மாடு மேய்த்தவர்கள் அங்கு சென்று ஒட்டகம் மேய்க்கிறார்கள், உளவியல் ரீதியாக இளைஞர்களை நோயாளிகளாக ஆக்கியுள்ளனர், இந்த நிலை மாற வேண்டும்.

தமிழகத்தில் திமுக என்பது ஒரு குடும்ப சொத்து, அது நிறுவனமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி மகன் என்ற தகுதியைத் தவிர ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. இங்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளது, அந்த பிரச்சினை எல்லாம் கேட்காமல், உனது கனவு என்ன என்று கேட்கிறார்கள், எனது கனவு  திமுகவை ஆட்சியில் இருந்து வீழ்த்துவதுதான், எனவே இந்த முறை மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Read Entire Article