நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிட்னி விற்பனை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட கோரிய மனுவை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் கிளை உத்தரவு.

கிட்னி விற்பனை வழக்கு

பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிட்னி விற்பனை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த ஆண்டு நீதிபதிகள் S.M. சுப்பிரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.தென் மண்டல காவல்துறை தலைவர் தலைமையில் சிறப்பு குழுவை நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பதில் மனு தாக்கல்

அப்போது, அரசு வழக்கறிஞர், பதில் மனு தாக்கல் செய்து வாதிடுகையில்..., சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று எப்ஐஆர் கள் போடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும், போலீசார் பள்ளிபாளையம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதேபோல் மருத்துவத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

என பதில் மனு தாக்கல் செய்து வாதிட்டார்.

வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள்...,” குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, இந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.