"நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" - சி.வி.சண்முகத்தின் ஏரியாவிலேயே சவால் விட்ட சசிகலா!

1 month ago 6
ARTICLE AD

விழுப்புரம்: அதிமுகவின் எஃகு கோட்டையாக கருதப்படும் விழுப்புரம் மாவட்டத்தில், அதுவும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சொந்த ஊரான திண்டிவனத்திலேயே சசிகலா தனது அரசியல் ஆட்டத்தை அதிரடியாகத் தொடங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சி.வி.சண்முகத்தின் கோட்டையில் சசிகலா என்ட்ரி

விழுப்புரம்: அதிமுகவின் எஃகு கோட்டையாக கருதப்படும் விழுப்புரம் மாவட்டத்தில், அதுவும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சொந்த ஊரான திண்டிவனத்திலேயே சசிகலா தனது அரசியல் ஆட்டத்தை அதிரடியாகத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு காலத்தில் சி.வி.சண்முகத்தின் நிழலாகவும், தீவிர விசுவாசியாகவும், முன்னால் நகரமன்ற துணை தலைவராகவும் வலம் வந்தவர் தான்  முஹம்மது ஷெரீப். கடந்த 2022-ல் இவர் சசிகலா அணிக்கு மாறியபோது அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால், இன்று வட மாவட்டங்களில் சசிகலாவின் தளபதியாக உருவெடுத்துள்ள முஹம்மது ஷெரீப், சி.வி.சண்முகத்தின் சொந்த மண்ணிலேயே பிரம்மாண்டமான இப்தார் நோன்பு நிகழ்ச்சியை நடத்தி அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ள சசிகலா, தனது அரசியல் பயணத்தின் முதல் முக்கிய நிகழ்வாக திண்டிவனத்தைத் தேர்ந்தெடுத்தது தற்செயலானது அல்ல என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அவருக்கு அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு, அப்பகுதி அதிமுகவினரிடையே பெரும் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய சசிகலா, பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டி ஆவேசமாக உரையாற்றினார்:

"நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் பயணிக்கும் நமக்கு, மக்கள் ஆதரவு என்றும் உண்டு. வரும் சட்டமன்றத் தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் வேரறுத்து நாம் வெற்றி வாகை சூடுவோம்!"

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் யாருக்கும் அஞ்சாமல் நேர்மையோடு நடைபோட்டு, எத்தகைய சோதனைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு, நம் கழகத் தொண்டர்களின் ஆதரவோடு தமிழக மக்களின் நலன் காப்போம் என்று இந்த பொன்னான நேரத்தில் உறுதி அளிக்கிறேன் என்று பேசினார்.

சொந்த ஊரிலேயே சசிகலா காலூன்றுவதை சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, "துரோகிகளை வேரறுப்போம்" என சசிகலா பேசியிருப்பது, அதிமுகவின் தற்போதைய முக்கியத்தலைவர்களைக் குறிவைத்தே சொல்லப்பட்டதாகப் பார்க்கப்படுகிறது.

சசிகலாவின் இந்த அதிரடி 'மூவ்', விழுப்புரம் மாவட்ட அரசியலில் ஒருபுதிய போரைத் தொடங்கி வைத்திருக்கிறது. வரும் நாட்களில் வட மாவட்ட அதிமுகவில் இன்னும் பல மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article