நான் களமிறங்க காரணம் இது தான் !! பொதுமக்களிடம் திலகபாமா தீவிர வாக்கு சேகரிப்பு !!

4 days ago 3
ARTICLE AD

சட்டமன்ற தேர்தல் 2026

தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் பல்வேறு கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் பல்வேறு விதமாக வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர் திலகபாமா மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்குமாறு எருக்கஞ்சேரி, சர்மா நகர், திருவள்ளூர் நகர் மேம்பாலம் சுற்றுப் பகுதி, புனல் கரை, அம்மன் கோவில் தெரு, அசோக் லேண்ட் நகர், எம்.கே.பி நகர் மேற்கு, புதுநகர், புதுநகர் சாலை, எஸ்.ஏ காலனி, அருண் சக்தி நகர், விநாயகர் கோவில், இந்திரா நகர், சோழ நகர், ஈ.எச் ரோடு, பாரதி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் திலகபாமா வீடு வீடாக சென்று பொது மக்களை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவு அளித்து மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்

பல்வேறு இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து , மலர்மாலை அணிவித்து வேட்பாளர் திலகபாமாவை உற்சாகமாக வரவேற்றனர். மேலும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டு உற்சாகமாக வாக்கு சேகரித்தனர்.

பிரச்சார வாகனத்தில் திலகபாமா பொதுமக்களிடம் பேசுகையில் ;

பெரம்பூர் தொகுதியில் நிலவும் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே நான் களம் இறங்கியுள்ளேன். மழைநீர் தேங்கும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தேவை. தற்காலிக நடவடிக்கைகள் போதாது.
மழை, வெள்ளம் போன்ற பிரச்சனைகளுக்காக 4000 கோடி ரூபாய் செலவிட்டதாக கூறப்படுகிறது

ஆனால் அந்த நிதி எங்கு சென்றது என்ற கேள்வி மக்களிடையே எழுகிறது. மக்களின் வாழ்வாதாரம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள். பெரம்பூருக்கு மாற்றம் தேவை , அது மக்களால் மக்களுக்காக மட்டுமே நடக்க வேண்டும் என தெரிவித்தார்.

Read Entire Article